தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல்: புதிய தலைவர் வாரியார் வெற்றி பெற்றார்
தூத்துக்குடி, மே 2:
தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சமீபத்திய தேர்தலில் வழக்கறிஞர் வாரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அவருக்கு சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் புதிய தலைவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில்....
மத்திய வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் தெர்மல் ராஜா, பொருளாளர் விக்னேஷ், சமத்துவ மக்கள் கழகம் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டி வேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
புதிய தலைவர் வாரியார் தனது வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வழக்கறிஞர் சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார்.
_________________________________________________


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக