புதன், 11 மார்ச், 2026

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் 11ஆம் ஆண்டு துவக்க விழா

Tamil Nadu updates 11-3-2026

தூத்துக்குடி, மார்ச் 11:

சமத்துவ மக்கள் கழகத்தின் 11ஆம் ஆண்டு துவக்க நாள் விழா தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் கட்சிக் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


 மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மற்றும் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் சகாயராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


 தொடர்ந்து மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் கேக் வெட்டி விழாவை கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

வீடியோ பார்க்க 

இந்த நிகழ்ச்சியில் ...

அருண் சுரேஷ் குமார், டேனியல் ராஜ், வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் குணசேகரன், வக்கீல் வைகுந்த், மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



மேலும் மகளிர் அணி நிர்வாகிகள் ஜேசு செல்வி, சாந்தி, ராசாத்தி, பிரம்மசக்தி, கன்னியம்மாள், ரேவதி, மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சண்முககுமார், மாநகரச் செயலாளர் முத்து செல்வம், மாநகர அவை தலைவர் மதியழகன், மாநகர பிரதிநிதிகள் சாமுவேல், ஞானராஜ், மாநகர மாணவரணி செயலாளர் விஜய் கார்த்திக், மாநகர வர்த்தக அணி செயலாளர் தொம்மை குரூஸ், வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாநகர வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியில் புகைப்படம் வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக