செவ்வாய், 10 மார்ச், 2026

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம்

Tamil Nadu updates, 

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி, மார்ச் 11:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சார்பில் தொடர் பட்டினி போராட்டம் புதன்கிழமை (11.03.2026) முதல் தொடங்கப்பட்டது.

இந்த பட்டினி போராட்டம் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்க அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. 

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

thoothukudileaks


போராட்டத்தின் தொடக்க நிகழ்வில் ஏஐசிசிடியு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் தோழர் சகாயம், மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத், மாவட்ட செயலாளர் தோழர் சிவராமன், சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் முருகன், தூய்மை பணியாளர் சங்க தலைவர் தோழர் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த தொடர் பட்டினி போராட்டத்தின் முதல் நாளில் தோழர் மின்னல் அம்ஜத், தோழர் பொன்ராஜ், பெண் தோழர்கள் வெங்கடேஸ்வரி, கணபதி, காளீஸ்வரி, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11-3-2026 தூத்துக்குடி தூய்மை பணியாளர்களின் தொடர் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவாக .... இன்று 

தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் தோழர் சாமு காந்தி  தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் மா கிருஷ்ணமூர்த்தி  மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா ஆகியோர் இன்று தூய்மை பணியாளர்கள் தொடர் பட்டினி போராட்டம் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர் 

thoothukudileaks


கோரிக்கைகள் :

2017 ஆம் ஆண்டு GO 62 படி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தொழிற்சங்க தலைவர் பொன்ராஜ் அவர்களை வேலைநீக்கம் செய்ததை ரத்து செய்து, உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.

75 நாட்களாக வேலை வழங்காமல் வைத்திருக்கும் நிலையை நிறுத்தி, அவருக்கு உரிய பணியை வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் உரிமைகளை பாதுகாக்க தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் விரோதமாக நடைபெறும் செயல்பாடுகளை நிறுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய நலன்கள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.


இந்த தகவலை ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான தோழர் மின்னல் அம்ஜத் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக