திங்கள், 9 மார்ச், 2026

தூத்துக்குடி மாநகராட்சி டெண்டர் விடப்பட்டும் 20 வருடங்களாக சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி

தூத்துக்குடி, மார்ச் 10:

தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட செல்வ விநாயகர் தெருவில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை மாநகராட்சி அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சாலை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தார் சாலை அல்லது பேவர் பிளாக் சாலை அமைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

thoothukudileaks


மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சுமார் 30 மீட்டர் நீளத்தில் சாலை அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் தார் அல்லது பேவர் பிளாக் சாலை அமைத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக