# தூத்துக்குடியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி, ஏப்ரல் 19:
தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் சின்னையா சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் மற்றும் நாடார் பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை கலந்து கொண்டார்.
மேலும் நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசை முத்து, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகரச் செயலாளர் உதயசூரியன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக