வெள்ளி, 18 ஏப்ரல், 2025

உஷாராக இருங்க!!! ரேசன் கடைகளில் கைரேகை, கருவிழி சரிபார்ப்பு: பொதுமக்கள் கண் பார்வை பாதிப்பு வருவதாக குற்றச்சாட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 #தூத்துக்குடி லீக்ஸ்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 


## ரேசன் கடைகளில் கைரேகை, கருவிழி சரிபார்ப்பு: பொதுமக்கள் அவதி


தூத்துக்குடி, ஏப்ரல் 19:


தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பொருட்கள் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பொதுமக்களிடம் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் மூலம் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பொருட்கள் வழங்கப்படுகின்றன.


 ஆனால் பெரும்பாலான நியாயவிலை கடைகளில் கைரேகை சரிபார்ப்பு கருவிகள் முறையாக வேலை செய்யவில்லை என்பதே பொதுமக்களின் புகாராக உள்ளது.




"நெட்வொர்க் மற்றும் கருவிகளில் கோளாறு இருந்தாலும், எங்களை நோக்கி 'உங்கள் கைரேகை விழவில்லை' என்று கூறி பொருட்கள் தர மறுக்கிறார்கள். போன மாதம் பதிவாகிய அதே கைரேகை இந்த மாதம் ஏன் பதிவாகவில்லை என்ற கேள்விக்கு ரேசன் கடை ஊழியர்களிடம் பதில் இல்லை," என்று வருத்தத்துடன் தெரிவித்தார் 

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.


கண் பார்வை பாதிப்பு விஷயம் 


குறிப்பாக, கருவிழி ஸ்கேனர் சரிபார்க்கும் கருவிகள் சிலருக்கு உடனடி பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.


 "இந்த கருவிகளால் சிலருக்கு கண் பார்வை சிறிது நேரம் மங்குகிறது, சிலருக்கு கண்ணில் நீர் வடிகிறது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கடுமையான கண் வலியை உணர்வதாகத் தெரிவிக்கின்றனர்," என்று சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.


மாற்று வழிமுறை தேவை


பொதுமக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தும், தொழில்நுட்ப கோளாறுகளால் பொருட்கள் கிடைக்காமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

குறிப்பாக முதியோர், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.



"தொழில்நுட்பம் மக்களுக்கு உதவ வேண்டுமே தவிர, அவர்களை அவதிப்படுத்தக் கூடாது. அரசு இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்," என்று உள்ளூர் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இந்த விவகாரம் குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று வழிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்படும்," என்று தெரிவித்தனர்.


தமிழக அரசு இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக