காமராஜர் பெயரில் நூலகம் – தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு
திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள மாபெரும் நூலகத்திற்கு, முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பெயர் சூட்டப்பட இருப்பதை வரவேற்று,.... தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும், தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நன்றித் தெரிவிப்பு நிகழ்வு,
மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், பொருளாளர் பழனிவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், விவசாய அணி செயலாளர் கனகராஜ், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், வேல்முருகன் காமராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.
இவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றியைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் ரவீந்திரனும் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக