# தூத்துக்குடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
தூத்துக்குடி, ஏப்ரல் 5:
தூத்துக்குடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
முகாமில் 14வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளிதுரை, மின்சார வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக முறையான மனுக்களை சமர்ப்பித்தார். அவருடன் சந்தனராஜ், குமார், சுரேஷ் மற்றும் . கண்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த சிறப்பு முகாம் மூலம் பகுதியில் நிலுவையில் உள்ள மின்சார பிரச்சினைகள், அடிக்கடி ஏற்படும் மின்தடைகள், மின் கட்டண பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த முகாமின் வெற்றியைத் தொடர்ந்து வரும் மாதங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக