#சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடியில் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வு
தூத்துக்குடி, ஏப்ரல் 2 சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி,... தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் தர்பூசணி மற்றும் தண்ணீர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார்.
நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் தண்ணீர் பழங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசைமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், நாடார் பேரவை மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் ஜேசு செல்வி, ஜெப ராணி, ராசாத்தி, ஜெப செல்வி, மல்லிகா, ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் மற்றும் செல்வராஜ், சண்முக குமார், ஸ்ரீ ராம், சுரேஷ், முத்துச்செல்வம், சின்னத்துரை, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக