நாள்: 15.08.2026 | இடம்: தூத்துக்குடி
விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம் செய்துவிட்டது!
தூத்துக்குடி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி: வாக்குறுதி அளித்தபடி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாக ரத்து செய்யாமல் ஏமாற்றி வரும் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டி காவிரியின் உரிமையை மீட்கத் தவறியதைக் கண்டித்தும் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் நேற்று (14.08.2026) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே காலை 11 மணியளவில் இப்போராட்டம் நடைபெற்றது.
தேர்தலுக்கு முன் ஒன்று... பின் ஒன்று...
இவ்வார்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:
"தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடனும் ரத்து செய்யப்படும் என தவெக அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வெறும் ₹75,000 மட்டுமே தள்ளுபடி செய்து விவசாயிகளை வஞ்சித்துள்ளது. இதற்கு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டே சாட்சி.
ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை போராடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார். ஆனால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் வேளையில், தவெக அரசு அதைத் தடுக்க துப்பில்லாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் என்ற நாடகத்தை நடத்துகிறது. முதல்வர் விஜய் ஒரு பொம்மை முதல்வராகச் செயல்படுகிறார்."
மேலும், "அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் மகளிர் கணக்கில் மாதம் ₹2,500 மற்றும் வங்கி கணக்கில் ₹10,000 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியில் குழப்பம் விளைவிக்கும் 4 பேரை நீக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம் பேச்சு!
இதனைத் தொடர்ந்து அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிங்காரம் பேசுகையில், கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து அதிரடியாகப் பேசினார்:
"முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிமுகவை பலவீனப்படுத்த நினைக்கிறார். கட்சியிலிருந்து விலகி மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து இணைந்த சிலர், மீண்டும் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
20-25 ஆண்டுகள் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அனுபவித்துவிட்டு, இப்போது கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். எம்.எல்.ஏ பதவி பறிபோய்விடும் என்பதால் தாங்களாகவே வெளியேறாமல், கட்சியிலிருந்து தம்மை நீக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
54 ஆண்டுகால கழகத் தொண்டனாகவும், அமைப்புச் செயலாளராகவும் பொதுச்செயலாளருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்—கட்சியில் குழப்பத்தை விளைவித்து வரும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விசுவநாதன், கே.பி. அன்பழகன் ஆகிய 4 பேரை நீக்கினாலே இயக்கத்தின் அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஏழை எளிய சாமானியனின் இயக்கமான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!"
திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் திருப்பாற்கடல், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என்.கே.பெருமாள், மோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் இரா.ஹென்றி, செங்கான், இலக்கிய அணி இணைச்செயலாளர் முடிமண் ராமசாமி, வழக்கறிஞர் பிரிவு ஈஸ்வரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு முஸ்தப்பா, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்டப் பொருளாளர் சேவியர் வெம்பூரார், சந்தானம், முருகேஸ்வரி, செரினா, ராமகிருஷ்ண கார்த்திக்,
மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், கே.விஜயகுமார், பில்லா விக்னேஷ், டேக் ராஜா, ஜெயச்சந்திர பிரபாகர், நடராஜன், டார்சன், ஜே.ஜே. தனராஜ், எம்.ஆர்.வி கவியரசன், அருண்ஜெபக்குமார், பத்மாவதி கனகசுந்தரம், என்.ஜி.ராஜேந்திரன், ஜாக்சன் துரைமணி, டாக்டர் எஸ்.எம்.ஏ.கோசல்ராம்ராஜா, சோலைசாமி, பால கணேசன், லட்சுமண பெருமாள் தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.டி.கருணாநிதி, முரகானந்தம், எஸ்.ஆர்.சுகந்தன்ஆதித்தன், இளங்கோ, சரவணபெருமாள், கல்வி குமார், நிலா சந்திரன், கே.என்.ஆனந்தராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, நட்டார்முத்து, நகரச் செயலாளர்கள் விஜயபாண்டியன், மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ராஜ்நாராயணன், அப்பாதுரை, மனோகரன், குணசேகரன், செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், அழகர்சாமி, போடுசாமி, பால்ராஜ், தனஞ்செயன், தனவதி, மகேஷ், ராமசந்திரன், கால்வாய் பரமசிவம், ஜவஹர், பேரூராட்சி செயலாளர்கள் வேதமாணிக்கம், செந்தில் ராஜகுமார், துரைசாமிராஜா, அசோக்குமார், அரசகுரு, அறுமுகநயினார், கிங்ஸ்லி ஸ்டாரிலிங், கோபாலகிருணணன், வீரவெற்றிவேல், மாரிமுத்து, ராஜ்குமார், ஆண்டி, முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், சுரேஷ்பாபு, மனுவேல்ராஜ், வெங்கடேஷ், அங்கமங்கலம் பாலமுருகன், ராஜா நேரு, ஜோஷ்வா அன்புராஜ், ஐடியல் பரமசிவன், கே.கே.பி.விஜயன், கணேசன், கொம்பையா, ஹார்பர் பாண்டி, எஸ்.கே.மாரியப்பன், ஆத்தூர் சுப்பிரமணியன், சோமசுந்தரம், மகளிர்கள் நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, தேவவிண்ணரசி, ஜெயராணி, ரம்யாநாராயணன், ஞானபுஷ்பம், மெஜூலா, ஷாலினி, ஸ்மைலா, முத்துலெட்சுமி, ஜெயசுதா, மற்றும் சொக்கலிங்கம், பண்டாரவிளை பாஸ்கர், திருத்துவசிங், வெள்ளையா, சுரேஷ், பால்துரை, வக்கீல் ராஜ்குமார் புதுக்கோட்டை முருகன், நல்ல மலை செல்லத்துரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக