வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசுகையில் பாலியல் வன்முறை செய்வது பூராவுமே?.... தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் தான் என பரபரப்பு குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில்... இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசுகையில்....

பாலியல் வன்முறை செய்வது.... பூராவுமே? தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் தான் என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார் ...


தூத்துக்குடி, ஆக.15:


விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததையும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி, த.வெ.க. அரசை கண்டித்து தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




thoothukudileaks


தூத்துக்குடி 12 வது மைய வாடி வாசல் அருகே உள்ள மைதானத்தில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.


வடக்கு மாவட்டக் கழக அமைப்புத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கே.பெருமாள், தெற்கு மாவட்டக் கழக அமைப்புத் தலைவர் திருப்பாற்கடல், தெற்கு மாவட்டக் கழக பொருளாளரும் முன்னாள் மேயர்கள் அந்தோனி கிரேஸி  சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஒன்றியக் கழகச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.மோகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் ஆகியோர் வரவேற்றனர்.


“காவிரி நீரை பெற்றுத்தர நடவடிக்கை இல்லை”


ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், ...


காவிரி நதி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


தற்போது காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர வேண்டிய நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


மேலும், தேர்தல் காலத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் எஸ்.பி.சண்முகநாதன் விமர்சித்தார்.


பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு”  பரபரப்பு குற்றச்சாட்டு


தொடர்ந்து அவர் பேசும்போது, (தூத்துக்குடி மாவட்டத்தில்.).. இங்கே 

பாலியல் வன்முறை செய்வது பூரா? தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் தான் என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார் 

மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் லாட்டரி போன்றவை அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன்...

தவெக பற்றி பேசிய வீடியோ..



thoothukudileaks



என்னாச்சு? என்னாச்சு?” – கோஷமிட்ட அதிமுகவினர்...


ஆர்ப்பாட்டத்தில், “5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியது என்னாச்சு?”, “சிறு, குறு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்” உள்ளிட்ட கோஷங்களை அதிமுகவினர் எழுப்பினர்.


அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ரா.ஹென்றி தேவேந்திரன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மைக்கேல் ஸ்டேனிஸ்பிரபு, ஈஸ்வரபாண்டியன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ராமசாமி, மீனவரணி இணைச் செயலாளர் ஏரோமிஸ் முன்னாள் கவுன்சிலர் மெஜிலா உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.


மேலும் மாவட்ட, ஒன்றிய, பகுதி கழகச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி, மருத்துவ அணி, ஐ.டி. விங், வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிரணியினர், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி நீர் உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக