வெள்ளி, 16 மே, 2025

தூத்துக்குடி திரையரங்கில் 'வாத்தியார்குப்பம்' – ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

Tamil Nadu updates photo news by Arunan journalist 


தூத்துக்குடி திரையரங்கில் 'வாத்தியார்குப்பம்' – ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!


தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவான 'வாத்தியார்குப்பம்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் வெற்றியை  கொண்டாடும் நிகழ்ச்சி, தூத்துக்குடி கிளியோபேட்ரா திரையரங்கில் நேற்று 15-5-2025 சிறப்பாக நடைபெற்றது.




, திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் மணிகண்டன்  தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

"வாத்தியார் குப்பம்" நம்ம ஊருக்கே சொந்தமான வெற்றி!!!

 படத்தின் இயக்குநர் ரஹ்மத் சாகிப் வந்ததும், அவரை திரைப்பட நடிகர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதையுடன் வரவேற்றனர். இயக்குநர் உரையில், "இந்த வெற்றி, தூத்துக்குடி மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. இது நம்ம ஊருக்கே சொந்தமான வெற்றி!" என்றார்.

நிகழ்வின் முக்கியத் தருணமாக, படத்தில் வில்லன் வேடத்தில் அசத்திய Dr. VPM, நடிகர்கள் மகேஷ்குமார், மாரிமுத்து, சக்திவேல் உள்ளிட்ட பலர்  ஒன்றுகூடி, வெற்றிக்கேக் வெட்டி ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.



விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள், படத்தில் தங்கள் பகுதிகள், மக்களின் உணர்வுகள், சம்பவங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றனவென்று பெருமையுடன் தெரிவித்தனர். "இந்தப் படம் நம்ம ஊரு குரலை உலகுக்குச் சொல்லுது!" என ஒருவர் பெருமிதத்துடன் கூறினார்.,


வாத்தியார் குப்பம் திரையுலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக பதியப்போகிறது.


தூத்துக்குடி லீக்ஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக