மெழுகுவர்த்தி ஏந்திய தமிழக வெற்றிக் கழக தோழர்கள் — தூத்துக்குடி.
ஈழத் தமிழர் நினைவு நாள்: தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடியில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்ச்சி
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் விஜய் ஆணையின்படி,
கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூரும் வகையில்,
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., அவரின் தலைமையில் நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பெருந்தொகையான கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டு,
மலர் தூவி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தி, ஈழத் தமிழர்களின் தியாகத்தையும் வரலாறையும் நினைவு கூர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பேச்சுகளும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வு, உணர்வுபூர்வமாகவும், ஒழுங்காகவும், அனைத்து குழு உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் நடைபெற்றது.
ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தை தொடர்ந்து நினைவூட்டும் வகையில் இது ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக