Tamil Nadu updates, photo news
by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் -
இலவச கண் பரிசோதனை முகாம் – பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு
தூத்துக்குடி:
இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் இன்று காலை தூத்துக்குடி கேஏஎஸ் ராம் தாஸ் பாலி கிளினிக்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாம், பாலி கிளினிக் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை, கிருஷ்ணன் கோயில் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், கண் புரை உள்ளிட்ட நோய்களுக்காக இலவசமாக பரிசோதனையும், தேவையானவர்களுக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் இதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சிறப்பாக செயல்பட்ட இந்த முகாம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
– தூத்துக்குடி லீக்ஸ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக