Tamil Nadu updates
தூத்துக்குடி லீக்ஸ்
சின்னக்கண்ணுபுரத்தில் விஷப் பாம்புகள், தேள்கள் அச்சுறுத்தல்; பொதுமக்கள் பீதியில்
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டில் அமைந்துள்ள சின்னக்கண்ணுபுரத்தை சுற்றியுள்ள தெருக்களில், காலி மனைகள் மற்றும் பராமரிப்பு இல்லாத பகுதிகளில் முள்புதர்களில் விஷம் கொண்ட பாம்புகள், தேள்கள் அதிகளவில் சுழன்றாடி வருகின்றன.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் தினசரி நடமாடுவதற்கே பயப்படுகின்றனர்.
பகலில் கூட தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த ஆபத்தான சூழ்நிலைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்கள்.
பொதுமக்கள் நல சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக துறையினரின் உதவியுடன் இடங்களில் உள்ள புதர்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
Thug Life - Official Trailer | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக