Thoothukudi news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Thoothukudi news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூலை, 2026

தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 முக்கிய கேள்விகள் ஆகஸ்ட் 1 முதல் கணக்கெடுப்பு பணி தொடக்கம் தவறான தகவல் அளித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை ? நீங்களே சுயமாக இணையதளம் மூலமும் பதிவு செய்வது எப்படி ? வழிமுறைகளை எளிதாக முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu updates 

தகவல் செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

இன்றுமுதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 33 கேள்விகளுக்கு பதிலளிக்க பொதுமக்கள் தயாராகுங்கள்

 

தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு தகவல்கள் !!!

தமிழகத்தில் இன்றுமுதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், ஒவ்வொரு குடும்பத்திடமும் மொத்தம் 33 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமாக 10 ஆண்

thoothukudileaks

டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன

இன்றுமுதல் தமிழகத்தில் தொடங்க இருக்கும்


மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் அரசு உத்தரவில் தகவல்



தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.


மக்கள் தொகை கணக்கெடுப்பு


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்.


2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

thoothukudileaks



தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.


( மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. )

 

மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின்போது  இந்த 33 கேள்விகள் மத்திய அரசு  கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன .

அதன் விபரம் பின்வருமாறு


மொத்த 33 கேள்விகள் கேட்கப்படும்

••••••••••••••••••••••••••••••••••••••••••

1.✓ அடுக்கு மாடி கட்டிட எண் ?

*FOR APARTMENT BUILDING NUMBER*

வசிக்கும் கட்டிடம் எண்

நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்

( நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )

••••••••••••••••••••••••••••••••••••••••••

2.✓  வீட்டு கதவு எண் ?

HOME DOOR NUMBER

*வீட்டு எண்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

3.✓ வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ? *

TILES OR CEMENT

(Mosaic & Red Oxide Floor)

வீட்டு தரை

••••••••••••••••••••••••••••••••••••••••••

4✓  வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?

BRICK OR MUD WALL

(Red Bricks / Cement Hollow Blocks) 

சுவர்

••••••••••••••••••••••••••••••••••••••••••

5.✓ வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது ?

CONCRETE SEELING OR WOODEN SEELING

•கான்கிரீட் (RCC) கூரை

•உலோகத் தாள்கள் (Metal Sheets)

•ஓடுகள் (Tiles)

•மரச்சட்டங்கள் (Wooden Trusses)

•மரப்பலகை / வைக்கோல்

கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்

••••••••••••••••••••••••••••••••••••••••••

6.✓  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா ( பயன்பாட்டை உறுதி செய்தல் ? )*

LIVING OR LOCKED

வீட்டின் பயன்பாடு

••••••••••••••••••••••••••••••••••••••••••

*7.✓ எந்த மாதிரி வீட்டின் அமைப்பு ?*

*INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT*

மாடி வீடு (Duplex / Two-Story)

*வீட்டின் நிலை*

••••••••••••••••••••••••••••••••••••••••••

8.✓ குடும்ப எண் ?

*"குடும்ப எண்" (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.

••••••••••••••••••••••••••••••••••••••••••

9.✓ வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

HOW MANY MEMBERS IN HOME

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

10.✓  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன ?*

அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய

*FAMILY MEMBER NAME*

*குடும்ப தலைவர் பெயர்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*11.✓ வீட்டுத் தலைவரின் பாலினம் ( ஆணா  / பெண்ணா ) எது ?*

*MALE OR FEMALE*

*தலைவரின் பாலினம்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*12.✓ குடும்பத் தலைவர் எந்த ( ஜாதி ) சாதி (Caste) ?*

குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு


நீங்கள் "குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு" (Head of Household - Schedule Class) அல்லது "அரசு அட்டவணை வகுப்பினர் குடும்பத் தலைவருக்கான திட்டங்கள்" (SC Category Head of Household) பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்ப அட்டை (Ration Card), ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.


( Scheduled Caste / எஸ்சி - SC )

"பட்டியல் சாதியினரா" ?

அல்லது "பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்" ( Scheduled Tribes - ST ) பழங்குடி சாதியினரா அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா என்பது ?


இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் குடும்ப தலைவரின் அட்டவணை வகுப்பு ( "SC/ST/Other" ) என்பது, குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எந்த சமூகப் பிரிவைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லது இதர பிரிவினர்) சார்ந்தவர் என்பதைக் குறிக்கும். இது சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டது.


SC, ST மற்றும் பிறர்" என்பது பொதுவாக இந்தியாவில் இட ஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகப் பயன்படுத்தப்படும் சமூகக் குழுப் பிரிவுகளைக்குறிக்கிறது


• பட்டியல் சாதியினர் (SC) :-

வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், முன்னர் தலித்துகள் என்று அழைக்கப்பட்டவர்கள், இவர்கள் கடுமையான சமூகப் புறக்கணிப்பையும் தீண்டாமையையும் எதிர்கொண்டனர்.


• பட்டியல் பழங்குடியினர் (ST) :-

 பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள்; இவர்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் புவியியல் ரீதியான தனிமைப்படுத்தலால் அறியப்படுகிறார்கள்.


• மற்றவர்கள் :-

பொதுவாக இது , சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ (OBC), அல்லது அரசாங்க இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறாத சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்பொதுப் பிரிவினரையோ (UR) குறிக்கிறது .

••••••••••••••••••••••••••••••••••••••••••

13.✓ வீட்டின் உரிமை நிலை என்ன?

( சொந்த வீடா / வாடகை வீடா )

*OWN HOUSE OR RENTAL HOUSE*


வீட்டின் உரிமை நிலை

வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••

*14.✓ வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை ?*

HOW MANY ROOMS IN YOUR HOUSE

அறைகளின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

15.✓ வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை ?

*HOW MANY COUPLES IN YOUR HOUSE*

திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

••••••••••••••••••••••••••••••••••••••••••

16.✓ குடிநீரின் முக்கிய ஆதாரம் ?

குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன


(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)

IN WHICH PLACE YOU GETTING WATER*

*BY RIVER + LAKE + WELL + BORE

••••••••••••••••••••••••••••••••••••••••••

17.✓ குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது ?

( குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது )

*PRESENT YOU GETTING WATER BY PIPE LINE OR BORE

நிலத்தடி நீர் (Groundwater)

குடிநீர் இணைப்பு (Pipe Line)

*குடிநீருக்கான பிரதான ஆதாரம்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*18.✓ கரன்ட் வசதி உள்ளதா ?*

*விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்*

மின்சாரம் (Electricity) ஆகும்

••••••••••••••••••••••••••••••••••••••••••

*19.✓ கழிவறை உள்ளதா ?*

*கழிப்பிட வசதி*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*20.✓ கழிவறை எந்த வகை ?*


••••••••••••••••••••••••••••••••••••••••••

*21.✓ கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா ?*

கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு*

(Sewerage Connection)

••••••••••••••••••••••••••••••••••••••••••

*22.✓ குளியல் வசதி இருக்கிறதா ?*


••••••••••••••••••••••••••••••••••••••••••

*23.✓ சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா ?*

*சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு*

எல்.பி.ஜி (LPG)

குழாய் வழி கியாஸ் (PNG)

••••••••••••••••••••••••••••••••••••••••••

*24.✓ சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது ?*

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்*

•எல்.பி.ஜி (LPG)

•இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)

•மின்சாரம் (Electricity)

•விறகு, கரி மற்றும் சாணம் 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*25.✓ ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கா ?*

வானொலி,டிரான்சிஸ்டர்,

RADIO TRANSISTOR 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*26.✓ தொலைக்காட்சி ( TV ) இருக்கா ?*

 TELIVISION 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*27.✓ இணையதளம் வசதி இருக்கா ?*இணையதள வசதி*

INTERNET 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*28.✓ மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கா ?*

LAPTOP / COMPUTER 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*29.✓ தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கா ?*

TELEPHONE / MOBILE PHONE / SMARTPHONE 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*30.✓ சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கா ?*

CYCLE / SCOOTER / MOTORBIKE 

••••••••••••••••••••••••••••••••••••••••••

*31.✓ கார் / ஜீப் / வேன் இருக்கா ?*

CAR / JEEP / VAN

••••••••••••••••••••••••••••••••••••••••••

*32.✓ வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது ?*

•அரிசி (Rice)

•கோதுமை (Wheat)

•மக்காச்சோளம் (Maize / Corn)

•சிறுதானியங்கள் (Millets)

•பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley & Oats)


*பிரதான உணவு தானியங்கள்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

*33.✓ உங்கள் மொபைல் எண் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும் )*

செல்போன் எண்


••••••••••••••••••••••••••••••••••••••••••

*ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.

.

கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடிநீர், மின்சாரம், கழிவறை, சமையல் வசதி, இணைய வசதி, வாகனங்கள், மொபைல் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. 

மேலும், குடும்பத் தலைவர், சமூகப் பிரிவு, வீட்டு உரிமை, குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்படும்.

அரசு அதிகாரிகள் வழங்கியுள்ள தகவலின்படி, மக்கள் தவறான தகவல்களை வழங்கினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் உண்மையான தகவல்களை மட்டுமே வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கணினி அல்லது மொபைல் போன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து, கிடைக்கும் Self Enumeration ID-யை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பின்னர் வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அலுவலரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள், அரசின் நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு முக்கிய ஆதாரமாக அமையும் என்பதால், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

📰 பாக்ஸ் நியூஸ்

சுயமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யலாம்

பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை அரசு வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மொபைல் அல்லது கணினியில் சுயமாக பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும் முறை:

*

 முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பமும் தாங்களே சுயமாக இணையதளம் மூலம் லேப்டாப் அல்லது மொபைலில் தகவல்களை பதிவு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. அதன்படி se.census.gov.in என்ற இணையதளத்தை திறந்து கீழ்கண்ட விபரப்படி தங்களது குடும்ப விபரங்களை பதிவு செய்யுங்கள்.

மேல் தரப்பட்டுள்ள. லிங் அழுத்தி இணையதளம் செல்லுங்கள் 


1. முதலில் மாநிலத்தை தேர்வு செய்து captcha கொடுத்து Verified & Proceed கொடுங்கள், அதன்பிறகு OK கொடுங்கள்.


2. Name of the Head of the Household ல் குடும்ப தலைவரின் பெயரை கொடுங்கள் (கணவர், மனைவி அல்லது குடும்பத்தை நடத்த கூடிய யார் பெயரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்), அடுத்து உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மொபைல் நம்பரை கொடுங்கள். Email இருந்தால் கொடுங்கள். அதன்பிறகு Verified & Proceed கொடுங்கள்


3. Language செலக்ட் செய்து, உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை பதிவு செய்து Verify OTP கொடுங்கள், அடுத்து OK கொடுங்கள்.


4. Step 1 - அடுத்து Boundary கேட்கும். OK கொடுங்கள். அதில் மாநிலத்தை காண்பிக்கும், அதன் கீழ் மாவட்டத்தை தேர்ந்தெடுங்கள். அதன் கீழ் உங்கள் ஊரின் PINCODE கொடுங்கள். அதன் கீழ் உங்கள் வீடு அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து Search கொடுங்கள். Map காண்பிக்கும். அதில் 4 பக்கமும் உள்ள கொடு காண்பிக்கும், அதில் உங்கள் வீடு அருகே அதன் நடு இடத்தை கொண்டு வைத்து Confirm Location கொடுத்து Yes கொடுங்கள்.


5. Step 2 - வீட்டின் தரையின் முதன்மையான பொருள் கேட்கும் - அதற்கு Cement என கொடுங்கள். அடுத்து சுவற்றின் தரம் கேட்கும், அடுத்து மேலே ஒட்டப்பட்ட பொருள் கேட்கும், அடுத்து வீட்டின் condition கேட்கும், அனைத்தையும் கொடுத்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


6. Step 3 - உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் உள்ளனர் என்ற எண்ணை கொடுங்கள். (குடும்பத்தில் இன்று குழந்தை உட்பட அனைத்து நபர்களையும் கொடுங்கள், வேலை நிமித்தமாக வெளியில் எங்கு சென்று இருந்தாலும் அவர்களையும் சேர்த்து கொடுங்கள்). அடுத்து நீங்கள் கொடுத்த குடும்ப தலைவரின் பெயரை காண்பிக்கும். அடுத்து குடும்ப தலைவரின் Sex குறிப்பிடுங்கள். அடுத்து அவர்கள் SC,ST அல்லது other என்றால், சரியானதை Click செய்யுங்கள். அடுத்து வாடகை வீடா அல்லது சொந்த வீடா என குறிப்பிடுங்கள். எத்தனை room உள்ளது என குறிப்பிடுங்கள். குடும்பத்தில் திருமணமான நிலையில் எத்தனை Couples உள்ளனர் என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


7. Step 4 - குடிநீர் சம்பந்தமான தகவல்கள். உங்கள் வீட்டிற்கு குடிநீர் எப்படி வருகிறது. குடிநீர் வீட்டுக்குள்ளேயே வருகிறதா, வீட்டில் எலக்ட்ரிக் லைன் வருகிறதா, latrine உள்ளதா, latrine type என்ன, வீட்டு தண்ணீர் எப்படி வெளியேறுகிறது. குளியல் அறை உள்ளதா, LPG Gas உள்ளதா, வீட்டின் முக்கிய fuel என்ன என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


8. Step 5 - Radio தகவல்கள் - ரேடியோ உள்ளதா, television உள்ளதா, இன்டர்நெட் உள்ளதா, லேப்டாப் உள்ளதா, டெலிபோன் வசதி, பைக் உள்ளதா, கார் உள்ளதா, சாப்பிட உபயோகிக்கும் சமையல் பொருள், கொடுத்து நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர் சரியா என பார்த்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.


9. Step 6 ல் - இதுவரை நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, சரி என்றால் Save as Draft Final Submit கொடுக்கவும். 


கொடுத்தவுடன் Submitted Successfully என்ற பக்கம் வந்து Your Self Enumeration ID என்ற ஒரு நம்பர் கொடுக்கும். கொடுக்கும். அந்த நம்பரை screen shot எடுத்து வைத்து கொண்டு, அடுத்த மாதம் உங்கள் வீடு தேடி வரும் Census Enumerator இடம் காண்பியுங்கள்.


வழிமுறைகள் வீடியோ பார்க்க 

அதாவது Final Submit செய்த பிறகு கிடைக்கும் Self Enumeration ID-யை பாதுகாத்து வைத்திருந்து, கணக்கெடுப்பு அலுவலரிடம் காட்ட வேண்டும்.

குறிப்பு: பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் அல்லது கணக்கெடுப்பு அலுவலர்கள் மூலம் மட்டுமே தகவல்களை பதிவு செய்ய வேண்டும். தெரியாத இணைப்புகள் அல்லது சமூக ஊடகங்களில் பகிரப்படும் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்.

தகவல் செய்தி புகைப்படங்கள் ரோஜா அருணன் செய்தியாளர் 

புதன், 17 ஜூன், 2026

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி கப்பல் கட்டுமானத் திட்டம்: 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates, news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 17:

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக, தென் கொரியாவின் முன்னணி நிறுவனமான HD Korea Shipbuilding & Offshore Engineering (HD KSOE) நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாடு முதலமைச்சர்  ஜோசப் விஜய் சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், துணைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறைகள் மூலம் ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசு மற்றும் HD KSOE நிறுவனம் இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ள நிலையில், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தத் திட்டம் சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. 


மேலும், National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) நிறுவனம் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

thoothukudileaks


திட்டத்திற்குத் தேவையான அனுமதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சருடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது.


 தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு தொழில்துறைத் துறை அதிகாரிகள், TIDCO, SIPCOT மற்றும் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியை தென்னிந்தியாவின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக மாற்றும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் . யங் ஹூன் குவான் ( Young Hoon Kwon) தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.


திங்கள், 15 ஜூன், 2026

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை. ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை நடந்தது என்ன? இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 15:

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தமின்றி, நடுநிலையான மற்றும் சட்டப்படியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks




இதுகுறித்து ..

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன் மற்றும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.


மனித நேயம்!!!

அதேநேரத்தில், விசாரணை நிறைவடைவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதல்களுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் !!! நீதி மன்றம் தான் முடிவு செய்யும்!!!

இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலாக விவகாரத்தை மாற்றும் முயற்சிகள் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது ஊடகங்களோ, அரசியல் மேடைகளோ அல்ல; காவல்துறையின் விசாரணையும் நீதிமன்றத்தின் தீர்ப்பும்தான் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மன உளைச்சல் !!!

மேலும், அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதள விவாதங்களால் பாலசுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சமூக அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பந்தபடாத ஒரு பெண்ணின் பெயரும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக கூறப்படும் நிலையில், தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு !!!

அவரது வாக்குமூலம் காவல்துறை அல்லது நீதித்துறை நடுவர் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம் அல்லது அவதூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


"நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்றும் கூற வரவில்லை. அரசியல் அழுத்தமில்லாத, ஊடக விசாரணை இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கையாகும்" என்று டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிய வேண்டும்!!!

மேலும், பாலியல் வழக்குகளில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பப் பெண்கள் மற்றும் சாட்சிகளாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அரசியல் கருத்து வேறுபாடுகளின் பெயரில் குடும்ப உறுப்பினர்களும் பெண்களும் பாதிக்கப்படக் கூடாது என்றும், காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.


பாக்ஸ் செய்தி

இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளன

ஒருவர் 

 தனது மனுவில், தனக்கு எந்தவிதமான பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பொய்யான வாக்குமூலம் அளிக்க மிரட்டல், ஆசை வார்த்தைகள் கூறி தூண்டுதல், அவதூறு பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். தனது உண்மை வாக்குமூலத்தை சட்டப்படி பதிவு செய்து, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல்,

மற்றொரு ஒருவர் 

 தனது மனுவில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலசுப்பிரமணியனின் மனைவி எனத் தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தம், மீடியா பேட்டிகள் மற்றும் சமூக வலைத்தள அவதூறுகளால் தனது குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கும் சமூக அவமானத்திற்கும் ஆளாகி வருவதாக கூறியுள்ளார்.

 தாமதம் ஏன்???

மேலும், புகாரின் பின்னணியில் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவகாரங்கள் உள்ளனவா என்பதையும், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களையும் நடுநிலையாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த வழக்கில் உண்மை நிலை சட்ட விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே வெளிவர வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு மனுக்களிலும், எந்தவிதமான அரசியல் அழுத்தமும் இன்றி, நடுநிலையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

திங்கள், 1 ஜூன், 2026

கத்தி" பட வசனத்தை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் மு.பேச்சிமுத்து ஆவேச உரை!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

​நெல் கொள்முதல் தொகையை வழங்கக்கோரி நெல்லையில் விவசாயிகள் அதிரடி ஆர்ப்பாட்டம்!

​"கத்தி" பட வசனத்தை மேற்கோள் காட்டி வழக்கறிஞர் மு.பேச்சிமுத்து ஆவேச உரை!

நெல்லை, ஜூன் 01:

திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் இன்று (01.06.2026) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வழங்காமல் இழுத்தடித்து வரும் NCCF (தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு) நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாமதமாகும் நெல் தொகையை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

thoothukudileaks


​கத்தி பட வசனத்தால் அதிரடி:

​இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கீழப்பாட்டம் மு.பேச்சிமுத்து (வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்) கலந்துகொண்டு விவசாயிகளின் நிலையை எடுத்துரைத்து ஆவேசமாக பேசினார். 

​அப்போது அவர் பேசுகையில், திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள், தனது 'கத்தி' திரைப்படத்தில் பேசிய புகழ்பெற்ற வசனத்தை மேற்கோள் காட்டினார்.

​"நமக்கு சோறு போடுற விவசாயி பசியில அழும்போது, நாம சாப்பிடுற ஒவ்வொரு பருக்கை சோறும் ரத்தம்..."

thoothukudileaks


​என்ற ரீதியில் அமைந்த அந்த அழுத்தமான வசனத்தை சுட்டிக்காட்டி, 3 மாத காலமாக தங்களது உழைப்பிற்கான காசு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளின் வலியை அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில் முழங்கினார்.


​கோரிக்கைகள்:

  • ​3 மாதமாக முடக்கி வைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் தொகையை வட்டியுடன் உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
  • ​NCCF நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை மத்திய, மாநில அரசுகள் தட்டிக்கேட்க வேண்டும்.
  • ​விவசாயிகளின் உழைப்பை சுரண்டும் இத்தகைய தாமதங்கள் இனிமேல் தொடரக் கூடாது.

​இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர். செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

திங்கள், 11 மே, 2026

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நவீன கண்காணிப்பு: 37 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை எஸ்பி தொடங்கி வைத்தார்

Tamil Nadu updates 11-5-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி | மே 11, 2026

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்பை (PA System) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப.  இன்று திறந்து வைத்தார்.

thoothukudileaks


குற்றத்தடுப்பு நடவடிக்கை

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல்துறை சார்பில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகள்

பேருந்து நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வெளிப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பின்வருமாறு:

கண்காணிப்பு கேமராக்கள்: பயணிகள் காத்திருக்கும் பகுதி, பேருந்துகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 37 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒலிபெருக்கி அமைப்பு (PA System): பேருந்து நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை வழங்க உயர்திறன் கொண்ட ஆம்பிளிஃபையர் மற்றும் 8 ஹாரன் ஸ்பீக்கர்கள் நிறுவப்பட்டுள்ளன.

விரிவாக்கம்: பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஷேர் ஆட்டோ நிறுத்தம் முதல் கண்ணா சில்க்ஸ் வரை இந்த ஒலிபெருக்கி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

video 

நேரடி கண்காணிப்பு

இந்த கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்புகள் அனைத்தும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நவீன சிசிடிவி காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீசார் நேரடியாக கண்காணிப்பதோடு, அவசர காலங்களில் ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பங்கேற்பாளர்கள்

இந்தத் தொடக்க விழாவில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . சுனில், இந்தத் திட்டத்தை உருவாக்க உதவிய சிக்னல் கோர் சொல்யூசன்ஸ் (Core Techno Solutions) நிறுவனத்தினர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி லீக்ஸ் - செய்திகளுக்காக உங்கள் நிருபர்.