தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
Tamil Nadu updates, news by Arunan journalist
தூத்துக்குடி, ஜூன் 17:
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக, தென் கொரியாவின் முன்னணி நிறுவனமான HD Korea Shipbuilding & Offshore Engineering (HD KSOE) நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறைகள் மூலம் ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் HD KSOE நிறுவனம் இடையே ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ள நிலையில், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தத் திட்டம் சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) நிறுவனம் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
திட்டத்திற்குத் தேவையான அனுமதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சருடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது.
தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு தொழில்துறைத் துறை அதிகாரிகள், TIDCO, SIPCOT மற்றும் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியை தென்னிந்தியாவின் முக்கிய கப்பல் கட்டுமான மையமாக மாற்றும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் . யங் ஹூன் குவான் ( Young Hoon Kwon) தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக