திங்கள், 19 மே, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுவுடன் கலந்துகொண்ட மதிமுக - மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை


தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுவுடன் கலந்துகொண்ட மதிமுக - மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், இன்சூரன்ஸ் தொகை, நிவாரணத் தொகை மற்றும் வேலிக்கருவிகள் அகற்றும் விவகாரங்களில் நேரடியாக கோரிக்கை வைத்தனர்.



இந்த கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ்  தலைமையிலான மதிமுக குழுவினர் பங்கேற்றனர். இதில் மகாராஜன் மற்றும் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு உள்துறை மற்றும் வேளாண்மை துறையை சார்ந்த பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

மனுவில், விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணத் தொகைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றும்,  வேலிக்கருவை மரங்களை அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுவை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக