திங்கள், 19 மே, 2025

பிச்சிவிளை ரேசன் கடையில் முறைகேடு: விற்பனையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Tamil Nadu updates -19- 5-2025

 – பிச்சிவிளை ரேசன் கடையில் முறைகேடு: விற்பனையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

அதிர்ச்சி!!!

தூத்துக்குடி:
திருச்செந்தூர் தாலுகா, பிச்சிவிளை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருகிறது எனக் கூறி, கிராமவாசி A.P. பேச்சிமுத்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.



கள்ள சந்தை குற்றச்சாட்டு!!!

பிச்சிவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடை (கடை எண்: 26CP060PY) விற்பனையாளர்  சித்திரைசெல்வன் கடந்த 10 ஆண்டுகளாக அரசு வழங்கும் அரிசி, சீனி, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற முக்கிய நுகர்வோர் பொருட்களை பொதுமக்களுக்கு உரிய முறையில் வழங்காமல், அவற்றை வெளிச்சந்தைக்கு கடத்தி வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்டு பிடிப்பு!!!

பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, கூட்டுறவு சார்பதிவாளர் மேற்கொண்ட ஆய்வில், சுமார் ரூ.13,870 மதிப்பிலான ரேசன் பொருட்கள் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஏன்?

 இதனால் . சித்திரைசெல்வன் மீது அபராதம் விதிக்கப்பட்டும், அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டும் உள்ளார்.

இந்நிலையில், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாமல், அவரை மீண்டும் பணி செய்ய அனுமதி வழங்க முயற்சிகள் நடப்பது கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை எடுக்க படுமா!!!

 “நான் மீண்டும் இந்த வாரம் கடைக்கு வந்து விடுவேன்” என்ற அவரது உரையாடல், முறைகேடுகள் மீண்டும் தொடரும் அபாயத்தை உணர்த்துகிறது.

இதனையடுத்து,  சித்திரைசெல்வன் மீது உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை வழியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து புதிய நபரைக் நியமிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

- தூத்துக்குடி லீக்ஸ்
நாள்: 19 மே 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக