#தூத்துக்குடி லீக்ஸ் செய்தி
Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president
தூத்துக்குடி, மே 20:
இந்தியாவின் நிலைப்பாடுகளை வெளிநாடுகளில் எடுத்துரைக்கும் பணிக்காக தேர்வான திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.க்கு தூத்துக்குடி திமுகவினர் பாராட்டு விழா அளித்தனர்.
சமீபத்தில் பாகிஸ்தானில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை உருவாக்கியது. இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் இருதரப்பிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டன. பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டது.
தற்போது, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கும் பொருட்டு ஒன்றிய அரசால் பல கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் முன்னிலையில், திமுக பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவருமான சுரேஷ்குமார், திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவிந்திரன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பர், லிங்கராஜா உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக