செவ்வாய், 20 மே, 2025

தூத்துக்குடி முழுமைத்திட்டம் வெளியீடு: ஆட்சேபனைகளை 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி, மே 20:

 தூத்துக்குடி மாவட்டத்திற்கான முழுமைத்திட்டம் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 24, உட்பிரிவு 2-ன்கீழ் (தமிழ்நாடு சட்டம் 1972 பிரிவு 35) தயாரிக்கப்பட்ட இந்த முழுமைத்திட்டம், விதி எண் 17-ன்படி அறிவிக்கப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட இத்திட்டம் அரசாணை எண் 44, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ4(2)) துறை, நாள் 13.03.2025-ல் வழங்கப்பட்ட இணக்கத்தின்படி வெளியிடப்பட்டுள்ளது.


தூத்துக்குடி முழுமைத்திட்டத்தின் நில உபயோக வரைபடம் மற்றும் திட்ட அட்டவணையை அலுவலக வேலை நாட்களில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் இலவசமாக ஆய்வு செய்யலாம். அலுவலக முகவரி: மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், 106ஜெ-37, மில்லர்புரம் 2வது தெரு, தூத்துக்குடி - 628008.


திட்டத்தின் நகலை ஒரு பிரதி ரூ.5,000/- என்ற விலையில் தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


முழுமைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகளை நேரில் சென்றோ அல்லது masterplanttkd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ எழுத்து பூர்வமாக நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக