வியாழன், 7 ஏப்ரல், 2022

நடிகர் வடிவேலு பாணியில்...போலீசார் ஐயா வட்டமாக இங்க நட்டு வைச்சு இருந்த செல்போன் டவர் காணோம் தூக்கிட்டு போயிட்டாங்க வாங்க கண்டு பிடிச்சு கொடுங்க காவல்நிலையத்தில் வந்த புகாரால் போலீசார் அதிர்ச்சி

 காமெடி நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் வட்ட  கிணறு வற்றாத கிணறு இப்ப அந்த கிணற்றை காணவில்லை வாங்க கண்டு பிடிச்சு தாங்க என போலீசார் இடம் புகார் கொடுத்து போலீஸ் அதிகாரி களை மிரள வைப்பார் .

அதே போல் சம்பவம் காவல்நிலையத்தில் புகார் ஆக வந்து போலீசார் மிரண்டு போயுள்ளன.

வேலாண்டிபாளையத்தில் ...".ஐயா இங்க இங்கே நட்டு வச்சிருந்த எங்களோட செல் போன்  டவர் காணல!!! வாங்க கண்டு பிடிச்சு தாங்க ????"

30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் டவரை காணவில்லை என்று ஒருவர் புகார் கொடுக்க வந்தார்... வேற வழி இல்லாமல் தரப்பட்ட புகாரை விசாரித்த போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.



வேலாண்டிபாளையம் தடாகம் ரோடு கோனார் வீதியில். ஏர்செல் நிறுவன மொபைல் போன் டவர் இருந்தது. 


இந்த டவரையும், அவற்றுடன் இருந்த உதிரி பாகங்களையும் காணவில்லை என்று ஜி.டி.எல்., இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவன அதிகாரி அர்ஜூனன், 49, சாய்பாபா காலனி போலீசில் புகார் தெரிவித்தார்.

புகாரை படித்ததும் போலீசார் மயக்கம் போட்டு விழாத குறைதான். வடிவேலு நடித்த சினிமா காமெடியில் வருவதை போல, 'கெணத்தைக் காணோமா, கெணத்துல இருந்த பம்புசெட்டை காணோமா' என்பதை போன்ற காட்சிகள் அரங்கேறின.


புகார் கொடுத்தவரிடம், 'டவரை காணோமா, அதில் இருந்த பேட்டரியை காணோமா' என்று திரும்ப திரும்ப விசாரித்தனர்.


 அதற்கு அவர்களோ, 'கடைசியாக சோதனைக்கு வந்து சென்றபோது, டவர் அதே இடத்தில்தான் இருந்தது. சில நாட்களில் யாரோ களவாடிச் சென்று விட்டனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்' என்றனர்.கடந்தாண்டு மார்ச் முதல் ஏப்.,28 வரையிலான காலத்தில், இந்த திருட்டு நடந்திருப்பதாகவும் நிறுவனத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர். சாய்பாபா காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக