தூத்துக்குடி லீக்ஸ் 8-4-2022 வெள்ளி
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
கோப்பு புகைப்படம் |
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம்.
10 ஆண்டுகளில் காலமான மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுதாரர்களும் விரும்பினால் பணியில் சேரலாம். மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒட்டு மொத்த மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7,500 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
25,500 மக்கள் நலப்பணியாளர்கள் கலைஞர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களை நீக்கி விட்டனர் என்று கூறினார். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக