thoothukudileaks 08-09-2021
மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் சாமி தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் , தூத்துக்குடி காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை , பாஸ்கர் , அன்னத்தாய் , உதவி ஆய்வாளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீது மாநில மனித உரிமை ஆனையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரனை இன்று 08-09-2021 திருநெல்வேலியில் நடைபெற்றது.
எதிர்மனுதாரர்களான ஆய்வாளர்கள் பாஸ்கர், அண்ணதாய் உதவி ஆய்வாளர்கள் நம்பிராஜன், லதா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
மனுதாரர் டாக்டர் சாமி மற்றும் மாணவி சோபியா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
டாக்டர் சாமி மற்றும் மாணவி சோபியா ஆகியோரை எதிர்மனுதாரர்கள் தரப்பில் குறுக்கு விசாரனை செய்தார்கள் .
அடுத்த விசாரனை 11-11-2021 தேதி நடைபெறும் என மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சுப.இராமச்சந்திரன் பெ.சந்தனசேகர் ஆஜரானார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக