தூத்துக்குடியில்...
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சிறப்பு மலர்
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் வெளியிட்டார்.
அ.தி.மு.க.நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் நவீன முறையில் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு இவ்வாரம் 2021 செப் 3 ந் தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளிவந்தது.
தூத்துக்குடியில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மலர் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் அ.தி.மு.க. மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் வெளியீட்டார்.
![]() |
| சிறப்பு மலர் வெளியிட்ட போது... |
முதல் பிரதிநிதியை முன்னாள் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி பெற்றார்.
அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சிறப்பு மலரை பெற்றுக்கொண்டனர்.
தூத்துக்குடி பழைய நகராட்சி யில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலை முன்பாக இன்று காலை 11-00 மணியளவில் நடைபெற்ற இ ந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கே.மிக்கேல். மூத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அய்யாத்துரை, பொ.ஜனார்த்தனம், இரா.குமாரவேல், என்.ஆர்.கிருஷ்ணன், நெப்போலியன், முருகன், நவநீதன், கோபால், மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கல்வி குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் பொன்னம்பலம், கே.டி.சி.தொப்பை கணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக