புதன், 8 செப்டம்பர், 2021

கழிவறை அருகே நின்று கொண்டிருந்த போது கத்தியால் தாக்கி கொலை முயற்சி!!! விளாத்திக்குளத்தில் தப்பி யோட்டம்!!! காவல்துறை அதிரடி 8 மணி நேரத்தில் குற்றவாளி கைது !!! தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு

 தூத்துக்குடி மாவட்டம் thoothukudileaks 08-09-2021

விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள பேரூராட்சி கழிவறை அருகே நின்று கொண்டிருந்த போது ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு  தப்பியோட்டம் போலீஸ் விரைந்து குற்றவாளியை கைது செய்ததது.

இது பற்றிய விவரமாவது:-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குரலையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துசாமி (60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  அவரது  சகோதரர் உமையனன் என்பவரது மகன் கணேசமூர்த்தி (42) என்பவருக்கும் நில பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.



இந்த முன்விரோதம் காரணமாக முத்துச்சாமி நேற்று (07.09.2021)  விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள பேரூராட்சி கழிவறை அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கணேசமூர்த்தி முத்துச்சாமிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு போலீஸ்-க்கு பயந்து ஓடியுள்ளார்.



இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிடடார்.


அவரது உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ்  மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கலா  தலைமையில் முதல் நிலை காவலர்கள் பால்ராஜ்,  மகேந்திரன் மற்றும்  முத்துகாமாட்சி ஆகிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் மேற்படி எதிரி கணேசமூர்த்தியை  உடனே கைது செய்தனர்.

 

 மேற்படி கொலை முயற்சி வழக்கு எதிரியை 8 மணி நேரத்தில் தப்பி ஓடியவரை விரைந்து கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக