தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 2 லட்சம் பணம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி லீக்ஸ் : 18.05.2022
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி பிரேமா (27) என்பவரிடம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா பாண்டி மனைவி அமுதா என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிவது போல் பேசி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி பிரேமாவிடம் ரூபாய் 1,98,000/- பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.
கைதான அமுதா |
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த பிரேமா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்இடம் புகார் அளித்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்
தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு இன்று (18.05.2022) வி.கே. புரம் அகஸ்தியர்புரம் பகுதியில் வைத்து மேற்படி பணமோசடியில் ஈடுபட்ட அமுதாவை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் சில நபர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக