தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சர் இடம் முன்னாள் நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளது.
தற்போது ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடுவிசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு செய்ததில் சுட்டுக் கொன்ற போலீஸாருக்கு எதிரான பரிந்துரைகள் இருக்குமா? என தமிழக மக்கள் எதிர்பார்ப்பு!
கடந்தாண்டு முன்பு தமிழக அரசிடம் முன்னாள் நீதிபதி
அருணா ஜெகதீசன் ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையின் பேரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் சட்ட முரணாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 பேருக்கு 1 இலட்சம் இழப்பீடு, படிப்புக்கேற்ற வேலை கொடுத்தது மற்றும் வேலை வாய்ப்பு, பாஸ்போர்ட் ஆகியவைகளில் தடங்கல் இல்லா சான்றிதழ் வழங்க உத்தரவு, ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ், உட்பட ஆணையத்தின் இடைக்கால பரிந்துரைகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அனைவரும் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து வரும் மே-22-2022 வரை ஆணையத்தின் விசாரணை கால வரம்பை தமிழக அரசு நீடித்து உத்தரவிட்டது.
நேற்று (18-05-22) விசாரணை ஆணையம் தனது முழு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.
இதனிடையில் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளின் அடிப்படையில் தூத்துக்குடியின் கீழ்க்கண்ட காவல்நிலையங்களில் 56 நபர்கள் மீது ரவுடி பட்டியலில் தொடங்கப்பட்டுள்ள விவரம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர். அரி ராகவன் தாக்கல் செய்த RTI மனுவில் தெரியவந்துள்ளது. வடபாகம் P.S-2 பேர்,
மத்திய பாகம் P.S-16 பேர்,
தென்பாகம் P.S-05 பேர்
தாளமுத்து நகர் P.S - 03 பேர்
முத்தையாபுரம் P.S - 02 பேர்,
சிப்காட் P.S-24 பேர்,
குளத்தூர் P.S - 02,
புதுக்கோட்டை P.S -01.
ஆக மொத்தம் 55 பேரை அதிமுக ஆட்சியில் ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.
இதில் மத்திய பாகம் P.Sல் -16 பேர், தென்பாக P.Sல் - 05 பேரையும் நீக்கி உள்ளார்கள்.
ஆனால் மற்ற காவல் நிலையங்களில் தொடங்கப்பட்ட ரவுடி பட்டியில் நீக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
அதிலுள்ள அத்தனை பேரும் போலீஸ் கண்காணிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தமிழக அரசு கடந்த வருடம் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் போராட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருந்தது. ஆனால் எல்லா வழக்குகளும் வாபஸ் பெறப்படவில்லை. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் உட்பட 38 வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
தங்கள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகளுக்காக தூத்துக்குடியின் பல்வேறு மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் பொதுமக்கள் ஆஜராகி கொண்டிருக்கிறார்கள்.
காவல் துறையினர் தற்போது வரை இன்னும் பல போராட்ட வழக்குகளில் இறுதி அறிக்கையை தயார் செய்து கொண்டும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொண்டும் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
எனவே ஆணையத்திடம் ஸ்டெர்லைட் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்த விவரங்களை ஆதாரத்தோடு கூறி ரவுடி பட்டியலில் இருந்து நீக்கவும், நீதிமன்ற நிலுவையிலுள்ள வழக்குகள் உட்பட பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை வாபஸ் வாங்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டி மனு அனுப்பி இருந்தோம்.
மேலும் தூத்துக்குடியில் நடந்த ஆணையத்தின் விசாரணையில் சாட்சியமளித்த குண்டடிபட்டவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள், போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் போலீஸார் செய்த படுகொலைகளை கூறியுள்ளார்கள்.
காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிற்கு ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதே இறந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், தூத்துக்குடி/தமிழக மக்களின்அனைவரும் விருப்பம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.
இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக