முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் இன்று (18-5-2022) விடுதலை செய்யப்பட்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேரறிவாளனின் 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது. உலக தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வுள்ள அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார் கள்.
தூத்துக்குடியில் இன்று(18-5-2022 )மதியம் 2.00 மணியளவில் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே உள்ள அம்பேத்கார் சிலை முன்பாக
தமிழர் விடியல் கட்சி தலைமையில்
பட்டாசு வெடித்து , முழக்கங்கள் எழுப்பி , அப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில்
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
மாவட்ட செயலாளர் தோழர் அசன்
தமிழ்பு புலிகள் கட்சி
மாவட்ட செயலாளர்
தோழர் தாஸ் , கத்தார் பாலு சரவணன்
மனிதநேய மக்கள் கட்சி
மாநகர செயலாளர்
தோழர் பிரவீன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
மாவட்ட செயலாளர்
தோழர் பிராசாத்
மற்றும் ,
தமிழர் விடியல் கட்சி
மாணவரணி பொறுப்பாளர் தோழர் டேவிட்ராஜ் ,பெஞ்சமின் , சுந்தர் ,
ராஜபாண்டி ,
மற்றும் தோழமை இயக்கங்களின் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக