தூத்துக்குடி லீக்ஸ்: 03.09.2021
தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் அஜித் (33) என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கோல்டுமேன் மகன் விஜய் (30) என்பவர் நேற்று (02.09.2021) இரவு மீன்பிடி துறைமுகம் பகுதியில் வைத்து மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அஜித்திடம் விஜய் தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அஜித் இன்று 03-09-2021 அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தார்.
மேலும் எதிரி விஜய் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் உள்ளது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக