புதன், 12 மார்ச், 2025

தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் நல்வாழ்வு பணியாளர்கள் தீடீர் ஸ்ட்ரைக்!

தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் நல்வாழ்வு பணியாளர்கள் தீடீர் ஸ்ட்ரைக்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல பகுதிகளில் இன்று(12-3-2025) காலை 7 மணியளவில் மக்கள் நல்வாழ்வு பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு கூடிய பணியாளர்கள், குப்பை சேகரிப்பு பணியில் தங்களுக்கு டார்ச்சர் அடக்குமுறைகள் ஏற்படுவதாகவும், குப்பைகளை சேகரிப்பு பணியில்  அவர்கள் சொல்லும் இடங்களில் தான் சேகரிப்பு பொருட்களை போட வேண்டும் என வலுக்கட்டாயமாக ? கூடுதல் பனிசுமை அழுத்தம் தரப்படுகிறதாம்.


இதனை தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பணியாளர்களை சந்திக்க சென்றார்கள் 

அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.


 இதன் பிறகு, பணியாளர்கள் தங்கள் பணிக்கு திரும்பினர்.



இதன் காரணமாக நகரின் சில பகுதிகளில் தற்காலிகமாக குப்பை அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக