புதன், 12 மார்ச், 2025

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் மைக் ஸ்டாண்ட் கூடம் வழங்கல்

Tamil Nadu updates,12-3-2025

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் மைக் ஸ்டாண்ட்  கூடம் வழங்கல் 

தூத்துக்குடி: தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, பாஜக ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், வாகைகுளம் விமான நிலையத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான மைக் ஸ்டான்ட் கூடத்தை அமைத்து வழங்கினார்.

 மைக் ஸ்டான்ட் 


இந்த கூடத்தை இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து, பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தார். 




இதையடுத்து, பிரஸ் கிளப் நிர்வாகிகள் சார்பில் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், பொருளாளர் ராஜு, கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முத்துராமன், கண்ணன், ராஜன், மாரி ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாரிமுத்து, மணிகண்டன், மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.



தூத்துக்குடிக்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை, புதிதாக அமைக்கப்பட்ட செய்தியாளர் கூடத்தில்  (Mike stunt )முதல் நபராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். 

இந்த சந்திப்பின் போது, முன்னாள் எம்பியும் பாஜக மாநில துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் பாஜக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக