Tamil Nadu updates, photo Arunan
News by sunmugasuthram Reporter
நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்: கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு சேமநலநிதி வட்டித்தொகை வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகிக்க, மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்புரையாற்றினார். பின்னர் 555 ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.1,48,28,383 மதிப்புள்ள சேமநலநிதி வட்டித்தொகையை வழங்கி, கனிமொழி எம்.பி. பேசினார்.
குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்
கனிமொழி எம்பி பேசுகையில்,....
"நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் எல்லோருக்கும் முக்கியம். குழந்தைப் பருவத்தில் காது குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை முக்கியமானது.
"குறிப்பாக நம் பகுதிகளில் இந்த குறைபாடுகள் அதிகமாக உள்ளன. உறவினர்களுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்."
மேலும், "சாலையோர வியாபாரிகள் எந்த வித இடையூறும் இன்றி வியாபாரம் செய்ய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக வட்டியில்லாத கடன் மற்றும் உதவித்தொகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய இது உதவும்" என்று கூறினார்.
மாநகராட்சி மருத்துவ வசதிகள் மேம்பாடு
அமைச்சர் கீதாஜீவன் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி பேசுகையில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் அனைத்து தேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் ஆட்சியை செயல்படுத்தி வருகிறார். 400 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.
மாநகராட்சி மருத்துவ சேவைகளை மேம்படுத்த அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளடங்கிய தளங்களை உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய, மாநில அரசு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு அரசு வழங்கும் உதவித் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
பங்கேற்றோர் மற்றும் முன்னிலை வகித்தோர்
இந்த விழாவில் மருத்துவ கல்லூரி டீன் சிவக்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி இணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், நகராட்சி அதிகாரிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், சமூக நல அமைப்பினர், பொதுமக்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமுதாய அமைப்பாளர் சரவண பாமா நன்றியுரை வழங்கினார்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக