Tamil Nadu updates,17-2-2025
Photo news by Arunan journalist
தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் அல்லோலப்படும் நிலை
1984-85 காலகட்டத்தில் தூத்துக்குடி நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களின் சேமநலநிதிக்கான வட்டித் தொகை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்தது.
இதனால், ஓய்வூதியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்தபடி அந்த தொகையை பெற முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 78 பேருக்கு வட்டித் தொகை வழங்கப்பட்டது. இதுவரை 1984-85 முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான மொத்த தொகையான ரூ.4,19,51,765/- இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றிய 555 ஓய்வூதியர்களுக்கு தொகை வழங்கிட வேண்டும்
இதற்காக, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் இன்று சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சில ஓய்வூதியர்களுக்கு மேடையில் காசோலை வழங்கினர்.
ஆனால், மீதமுள்ள வயதான ஓய்வூதியர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் உறவினர்கள் எங்கே பணம் வழங்கப்படும் என்ற குழப்பத்தில் மண்டபத்தின் கீழ் பகுதியில் வரிசையில் காத்திருந்தனர்.
![]() |
| வரிசையில்... |
பெண்கள், முதியவர்கள் ஆகியோர் பல மணி நேரமாக காத்து கிடந்தார் கள் .
நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனால் 7-8 மணிக்கே ஓய்வூதியர்கள் வந்து காத்திருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்திற்கும் இடையில் பலரும் அல்லாடும் நிலை காணப்பட்டது.
தள்ளாத காலத்தில் ஓய்வூதியர்களை வரவழைத்து இதற்கு என்று ஒரு விழா எடுத்து இம்சிக்காமல அவரவர் முகவரி சென்றும் உரியவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கலாம் என்பது அனைவருது ஆதங்கமாக உள்ளது என்கிறார்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக