திங்கள், 10 நவம்பர், 2025

தூத்துக்குடியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, நவம்பர் 11:

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு (S.I.R) திட்டத்தை எதிர்த்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 12-வது வாசல் மைதானத்தில் நடைபெற்றது.

மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


இந்திய தேர்தல் ஆணையம் சுயாதீனமாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும், ஜனநாயக அமைப்புகள் பாஜக அரசின் அழுத்தத்தில் இயங்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.





வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர சீராய்வு மூலம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இது ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் குற்றம் சாட்டினர்.


தூத்துக்குடி லீக்ஸ், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக