ஞாயிறு, 9 நவம்பர், 2025

கோரம்பள்ளத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வாகனம் மோதி விபத்து — ஒருவர் இறப்பு, ஒருவர் காயம் சம்பவ இடத்திற்கு வந்த மதிமுக துரை வைகோ

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, நவம்பர் 9:

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வாகனம் மோதியதில் பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது.

N.Ramakrishnan.V.A.O.(RTD).



இந்த விபத்தில் தூத்துக்குடி முன்னாள் கிராம நிர்வாக அலுவலருமான ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த தளவாய்புரம் கிராம நிர்வாக அலுவலர் பேச்சிராஜ் கடுமையான காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாரத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


விபத்து சம்பவ இடத்திற்கு வந்த மதிமுக தலைவர் துரை வை கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக