Tamil Nadu updates,
photo news by marimuthu journalist
தூத்துக்குடி, நவம்பர் 8:
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பல கடைக்காரர்கள் கடை முன்பு 5 அடிக்கு மேல் கவுண்டர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததால், பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிற்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது.
![]() |
| பொருட்கள் உடன்.... |
இதனை அடுத்து, மாநகராட்சி ஆணையர் பிரியங்காவின் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அண்ணா பேருந்து நிலையம் சென்றனர். அங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கவுண்டர்கள் மற்றும் பொருட்கள் மாநகராட்சி வாகனம் மூலம் அகற்றப்பட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான கோடவுனில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் கடைக்காரர்களிடம், "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தால், அப்படி கடை எங்களுக்கு தேவையில்லை. சுவர் கட்டப்பட்டு அதனை பயன்படுத்திவிடுவோம்" என்று எச்சரித்தார்.
திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடைகளிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்றும்போது ஒரு கடையில் இருந்த நபர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
சில கடைக்காரர்களிடம் இனி ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும், மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்த சில கடைக்காரர்களிடம் வாடகை செலுத்த வேண்டாம், கடையை காலி செய்யுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையராக பிரியங்கா பதவி ஏற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதே நிலையை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து, அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு தொடராமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக