#தூத்துக்குடி லீக்ஸ்
Tamil Nadu updates, photo news
by Arunan journalist
30 ஜனவரி 2025, வியாழக்கிழமை
## கனிமொழி எம்பி பங்கேற்பில் ஏ.பி.சி மகாலெட்சுமி பெண்கள் கல்லூரியின் பொன்விழா விழா கோலாகலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள ஏ.பி.சி மகாலெட்சுமி பெண்கள் கல்லூரியின் பொன்விழா விழா இன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மேலும், கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட உள்ள ஆடிட்டோரியம் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக:
- அமைச்சர் கீதா ஜீவன்
- அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்
- மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி
- கல்லூரி தலைவர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம்
- காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம்
- கல்லூரி முதல்வர் கே.சுப்புலெட்சுமி
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக