தூத்துக்குடி லீக்ஸ்
Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
தூத்துக்குடி 2025 ஜனவரி 30
தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட ஒன்றியம், நகராட்சி, பேரூர், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வார்டு, கிளை வாரிய பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பிருந்தாவன் கல்யாண மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசும் போது:
கழக பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் எடப்பாடியார் தலைமையில் நடந்த மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது தீவிரபடுத்த கேட்டுகொண்டார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒரு பூத் கமிட்டிக்கு 9பேரை தேர்வு செய்ய வேண்டும்.
நடக்கும் தேர்தல் அ.தி.மு.க.வாழ்வா சாவா தேர்தலாகும். தி.மு.க.மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திஉள்ளது.
தனித்து நிற்கும் தைரியம் திமுக கட்சிக்கு கிடையாது.
எடப்பாடியார் வலிமையான கூட்டணி அமைப்பார்.
பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஒவ்வொவரு ஒன்றியம், நகராட்சி, பேரூர், பகுதிவாரியாக நானும், கழக நிர்வாகிகள் ஆய்வு செய்ய உள்ளோம்.
எங்களை ஏமாற்றமுடியாது, ஒரு பூத்தில் 9 பேரை நியமித்தால் 1500 ஓட்டுகளை நீங்கள் பார்த்து வேலை செய்தால், வெற்றிதேடி தரும்.
இவ்வாறு எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி, பகுதி கழக செயலாளர்களிடம் பூத் கமிட்டி பாரம் வழங்கி அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சின்னத்துரை பெருமாள்சாமி, முருகன், ஜெய்கணேஷ், தட்டார் முத்து, சேவியர், காசிராஜன், மனோகரன், குணசேகரன், செளந்தரபாண்டி, மற்றும் செந்தில் ராஜ்குமார், துரைசாமி, காசிராஜன், ரவிந்திரன், அந்தோணி கிரேஸி, மெஜுலா, சாந்தி, ஜுலியட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முருகன் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக