தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் ஒன்று சேர்ந்து நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு அரங்கில் வைத்து 15.06.2022 அன்று காலை 10 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் இரத்த தானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், பணியாளர் செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 250 அலகு இரத்த தானம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் Dr.ராஜேந்திரன், துணை முதல்வர் Dr.கலைவாணி மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரி Dr.J.சைலஸ் ஜெயமணி ஆகியோர் தலைமையேற்று முகாமை துவக்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கினைப்பாளர் Dr.I.இஸ்ரேல் ராஜா ஜான்லி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Dr.சபரி ராஜா, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் Dr.சாந்தி,மாணவப் பிரதிநிதிகள் Dr.விஜய் சூர்யா மற்றும் Dr.ஹேமதர்சினி ஆகியோர் செய்திருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக