ஆஸ்துமா எனப் படும் மூச்சு இளைப்பு திணறல் நோய் குறித்து உலக ஆஸ்துமா தினம் இன்று கடைபிடிக்க படுகிறது.
தூத்துக்குடி மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை ஆஸ்துமா தினத்தையொட்டி ..இன்று ( 3-4-2022 )காலை 10மணியளவில் சுவாச சிகிச்சை பிரிவு மாணவமாணவிகள் மற்றும் செவிலியர் ஆகியோர் கலந்து கொண்ட ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கும் விழிப்புணர்வு பற்றி கூட்டம் நடைபெற்றது.
இந்த நோய் குறித்து துறை தலைவர் டாக்டர் சங்கமித்ரா பேசியதாவது:-
ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுதே மருத்துவரிடம் காண்பித்தால் அவர்கள் நெபுலைசர் மூலமாக அந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று எடுத்துக் கூறினார்.
மாத்திரைகளும், ஊசி மருந்துகளும் அதற்கான சுவாச பயிற்சி மற்றும் சுவாச இயன் முறை சிகிச்சைகள் உண்டு.
மேலும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
புகைபிடித்தல் ரசாயன புகை களுக்கு எக்போஸ் ஆகுதல் மற்றும் தூசி மற்றும் பணியின் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் போதும் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பரம்பரையாக அலர்ஜி ( ஒவ்வாமை) காரணமாக ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.
நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் சங்கமித்ரா,முதல்வர் டி நேரு , உறைவிட மருத்துவர் டாக்டர் ஜே சைலஸ் ஜெபமணி அவர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் செவிலியர் மற்றும் சுவாச சிகிச்சை பிரிவு மாணவர்கள் பங்கேற்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக