சீனியர் ரிப்போர்ட்டர் வார இதழ் & தூத்துக்குடி லீக்ஸ்
சிறப்பு பார்வை கட்டுரை எழுதியவர் செய்தியாளர் அருணன் 2-3-2026
சுவாரஸ்யமான தகவல் முழுவதும் படிக்கவும்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த பட்சம் அமைச்சர்கள் தமிழக சட்டசபையில் தேர்வு இரண்டு பேர்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றார்கள். இதனால் ஆறுசட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சி எதிர்கட்சி தரப்பில் வேட்பாளராக நிற்க பெரும் போட்டி நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக அதிமுக வில் வேட்பாளர் ஆக தூத்துக்குடி பகுதியில் நிற்பவர்கள் பற்றி தகவல்கள் பரபரக்கின்றது.
அதிலும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி பெறுவது என்பது ரொம்ப சுலபம்
தூத்துக்குடி மாநகராட்சியில் 60 ல் 8வார்டு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு செல்கிறது அதனால் வெறும் 52 வார்டு பகுதி மட்டுமே வருவதால் ஒவ்வொரு வார்டிலும் தோராயமாக 5ஆயிரம் டூ 7 ஆயிரம் இருக்கிறதால் தூத்துக்குடி சட்டமன்றத் வேட்பாளர் தேர்வு பெறுவதும் மிக எளிதாக பார்க்கப்படுகிறது .
"சமீபத்திய தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி கணக்கெடுப்பின்படி 2,48,300 வாக்காளர்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன வாக்காளர் கவனிப்பு 1000என்றால்? 2,48,300 × 1000 கவனித்தால் கூட= 24,83,00,000
(அதாவது 2 கோடி 48 லட்சம் 30 ஆயிரம் × 1000 = 24 கோடி 83 லட்சம்) வருகின்றது
அதனால் தான் ஆளும் கட்சி எதிர் கட்சி வேட்பாளர்களிடம் 20கோடி பெற்று மேலும் தலைமை 10 கோடி சேர்த்து ஒரு தொகுதிக்கு 30 கோடி வழங்குகிறார்கள் என கேள்வி படுகிறோம்? ஆயிரம் தராமல்?இதில் 500 கவனித்து மீதி ஆட்டைய போடுவர்களும்...? எதுவுமே செலவழிக்காமல் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் வேட்பாளர்களும் உண்டாம்????? அடங் கொய்யா லே????!!! "
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் நிற்க விரும்புபதாக தெரியவருகிறது ஏனெனில் அவரதுசொந்த தொகுதியான ஸ்ரீவைகுண்டம் தொகுதியை அதிமுக கூட்டணி பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் சித்ராங்கன் நிற்பதற்கு விட்டு கொடுக்கிறார் ஆகவே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போகிறாராம் ?
தூத்துக்குடி தொகுதியில் நின்றிட கடந்த ஓராண்டாக தீவிரமாக வேலை செய்து வரும் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அவர் விட்டு கொடுப்பாரா? அல்லது அதிமுக தலைமைக்கு கட்டுப்பட்டு வேறு தொகுதிற்கு செல்வாரா இது ஒரு பக்கம் நீடிக்கிறது தூத்துக்குடி அப்படியானால்.. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் அதிமுக வேட்பாளர் எஸ் பி சண்முகநாதன் இருவரும் தேர்தல் களத்தில் மோது வார்கள்.
இருவரும் மோதினால், தூத்துக்குடியில் பெரும் மோதல் நிச்சயம்!
ஸ்ரீவைகுண்டம் தொகுதி
காங்கிரஸ் தற்போதைய எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் உடன் பாஜக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சித்ராங்கன் (அல்லது சித்ராங்கன் தொடர்புடையவர்) போட்டியிட வாய்ப்பு. எஸ்.பி. சண்முகநாதன் இத்தொகுதியை விட்டுக்கொடுத்தால், பாஜகவுக்கு இங்கு வலுவான களம் கிடைக்கும்
திருச்செந்தூர் தொகுதி
திமுக தரப்பில் வழக்கறிஞர் ஜோயல் (அல்லது தற்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்புடைய வாய்ப்பு) போட்டியிடலாம். பாஜக தரப்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடுவது குறித்து பேச்சு உள்ளது – ஆனால் சமீபத்தில் அவர் "2026-ல் தானே போட்டியிட மாட்டேன், தோழர்களுக்கு வாய்ப்பு" என்று தெரிவித்துள்ளார். எனவே இது உறுதியாகவில்லை.
விளாத்திகுளம் தொகுதி
திமுக தற்போதைய எம்எல்ஏ மார்கண்டேயன் vs அதிமுக தரப்பில் ஜெய விலாஸ் (பஸ் முதலாளி) அல்லது கடம்பூர் ராஜூ நிறுத்தப்பட வாய்ப்பு.
கோவில்பட்டி தொகுதி
திமுக தரப்பில் மாணிக்க ராஜா vs கடம்பூர் ராஜூ (அதிமுக அல்லது கூட்டணி தரப்பில்).
ஒட்டப்பிடாரம் தொகுதி
அதிமுக கூட்டணியில் அமமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் vs திமுக தரப்பில் மாரி செல்வராஜ் ஆதரவாளர் கபடி கணேசன் நிறுத்தப்பட சாத்தியம்.
இவை அனைத்தும் தற்போதைய வதந்திகள், கட்சி வட்டார தகவல்கள் அடிப்படையிலானவை. தேர்தல் நெருங்க நெருங்க, தலைமை முடிவுகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் மாறலாம்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இம்முறை பிரபலங்கள் மோதல் உறுதி போல தெரிகிறது – குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் இடையேயான உள் போட்டி, பண பலம், செல்வாக்கு ஆகியவை தேர்தல் களத்தை சூடாக்கும். யார் ஜெயிப்பார்கள்? மக்கள்தான் தீர்மானிப்பார்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்..
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் மொத்தம் 13,76,624 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்..
தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளர்களும்..
திருச்செந்தூர் தொகுதியில் 2,30,702 நபர்களும்,
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,12,885 நபர்களும்..
ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,40,988 வாக்காளர்களும்,
கோவில்பட்டி தொகுதியில் 2,40,017 வாக்காளர்களும் உள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 2,03,732 வாக்காளர்களும்.
ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்..
இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தொகுதி வாரியாக ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் விவரம்!!!
மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 6,78,752 பெண் வாக்காளர்களும், 6,49,224 ஆண் வாக்காளர்களும், 182 இதர பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்..
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,15,136 ஆண்கள், 1,21,263 பெண்கள் 62 இதர என மொத்தம் 2,36,461 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,08,526 ஆண்கள், 1,14,077 பெண்கள், 28 இதரர் என மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,02,364 ஆண்கள் 1,04,688 பெண்கள், 2 இதரர் என மொத்தம் 2,07,054 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,13,480 ஆண்கள், 1,19,002 பெண்கள், 54இதரர் என மொத்தம் 2,32,536 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,12,445 ஆண்கள், 1,19,062 பெண்கள், 22 இதரர் என மொத்தம் 2,31,529 வாக்காளர்கள் உள்ளனர்..
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 97,273 ஆண்கள், 1,00,660 பெண்கள் 14 இதரர் என மொத்தம் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்..
தொகுதிகளின் வாரியாகப் பார்க்கையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 2,36,461 வாக்காளர்களுடன் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது..
இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,32,536 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,31,529 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,07,054 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது.
குறிப்பாக தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்சமாக 1,21,263 பெண் வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 54 இதர பாலினத்தவரும் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதர பாலினத்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக 2 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி கட்டுரை புகைப்படங்கள்
அருணன் செய்தியாளர்







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக