செவ்வாய், 4 ஜூன், 2024

கனிமொழி எம்.பி மீண்டும் வெற்றி திமுக வினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 5-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி மீண்டும் வெற்றி தூத்துக்குடி மாவட்ட திமுக வினர் மகிழ்ச்சி கொண்டாடி வருகின்றனர் 



அதிமுக உள்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

     தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், 

நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


 இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. 

     கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,58,430 ஆகும். இதில் 4,72,056 ஆண் வாக்காளர்களும், 5,03,325 பெண் வாக்காளர்களும், 87 திருநங்கைகளும் என மொத்தம் 9,75,468 வாக்குகள் பதிவாகின. 



இதில் பதிவான மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வஉசி பொறியியல் கல்லூாியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன


     இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம்  தேதி காலை 8 மணிக்கு மின்னனு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் வேட்பாளா்கள் முகவா்கள் முன்னிலையில் எண்ணும் பணி தொடங்கியது.


 இதற்காக ஓவ்வொரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் போடப்பபட்டு இருந்தன.


 தூத்துக்குடி கோவில்பட்டி தொகுதிகளில் 21 சுற்றுகளும், ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 19 சுற்றுகளும் வாக்குள் எண்ணப்பட்டன.


 இதில் முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். 

     இதில் கனிமொழி 540729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 


அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் 147991 வாக்குகள் பெற்றார். 


இதன் மூலம் 392738 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி எம்பி வெற்றி வாகைசூடினார்.


 கடந்த முறை 563143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. 



 பின்னர் வெற்றி வெற்ற கனிமொழி எம்்பிக்கு தேர்தல் அதிகாாியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார்.


 அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பொியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், உள்பட பலர் உடனிருந்தனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம் வருமாறு ...


கனிமொழி கருணாநிதி (திமுக) 540729, 


சிவசாமி வேலுமணி (அதிமுக) 147991,


 விஜயசீலன் 

( த.மா.கா.) 122380,


 ரொவீனா ரூத் ஜோன் (நாம் தமிழர் கட்சி) 120300, 


ராஜா  (

நாம் இந்தியர் கட்சி) 6640,  


அருணாதேவி (சுயேட்சை) 6072,


 சித்திரை ஜெகன் எஸ் (சுயேட்சை) 3640, 


 சிவனேஸ்வரன் ஜே (சுயேட்சை) 2245, 


  சாமுவேல் (சுயேட்சை) 2240,


 மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ்) 2158, 


 சண்முகசுந்தரம் கே (சுயேட்சை) 1832,


 முருகபாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி) 1736,


 பொன்குமரன்  (சுயேட்சை) 894,


 ஜெயக்குமார்  (சுயேட்சை) 825,

 காந்திமல்லர்  (சுயேட்சை) 791,

 பிஷப் டாக்டர் கோட்ரே நோபல் 

(ஆ. ஜ.பா.க) 757,


 பெருமாள்குமார்  புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி 727,

 இசக்கிமுத்து  (சுயேட்சை) 699,

 கண்ணன்  (சுயேட்சை) 679,


 டேவிட் ஜெபசீலன் (சுயேட்சை) 656,

 சுடலைமுத்து (சுயேட்சை) 576,

 கிருஷ்ணன்  (சுயேட்சை) 479,


 ராதாகிருஷ்ணன்  (சுயேட்சை) 456,

 ஜேம்ஸ்  (சுயேட்சை) 433, 


பொன்ராஜ் (சுயேட்சை) 428,


 பிரசன்ன குமார் (சுயேட்சை) 396,

 செல்வமுத்துக்குமார்  (சுயேட்சை) 341,


 செந்தில் குமார் (சுயேட்சை) 290,

 நோட்டா 9682

 திமுக வேட்பாளர் கனிமொழி யை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக