புதன், 5 ஜூன், 2024

முதல்வர் தொகுதியில் திமுக வாக்குகள் குறைந்து சரிவு மக்கள் மத்தியில் வளர்ச்சி பாதையில் பாஜக தாமரை சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்

 என் மண் என் மக்கள் யாத்திரை - முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சொந்த தொகுதியில் திமுக வாக்குகள் வெகுவாக குறைந்து இந்த தடவை  பின்னடைவு சந்தித்து உள்ளது அதே வேளையில் பாஜக வெகுவாக மக்கள் மத்தியில் வளர்ச்சி பெற்று இருக்கிறது என பாஜக வடசென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

இது பற்றிய செய்தியாவது:-


கடந்த 2021 - ம் ஆண்டு  நடை

பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக  தமிழக முதல்வர்  ஸ்டாலின் போட்டியிட்டார்.


அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது.... திமுக பெற்ற 10.05,522 வாக்குகளை பெற்றது!!!. 



ஆனால் ?

தற்போது வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில்  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக 95,084 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது

திமுக வாக்குகள் குறைந்தது

பின்னடைவு 

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு 

பிறகு  தற்போதைய 2024  பாராளுமன்ற தேர்தலில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் குறைந்து முதல்வரின் சொந்தத் தொகுதியில் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது. 


கடந்த சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக- பாஜக கூட்டணியில் போட்டியிட்ட 

அதிமுக வேட்பாளர்  ஆதி ராஜாராம் 35,138 வாக்குகளை பெற்றிருந்தார். 



இந்த முறை 2024 பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட பாஜக வேட்பாளர்  பால்கனகராஜ் முதல்வரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 25,585  வாக்குகளை பெற்றுள்ளார்.

அதிமுக 

மூன்றாவது இடம் !

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில்... 

அதிமுக மூன்றாவது இடத்தை பெற்று 

18,108 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.


தமிழக முதல்வர்  ஸ்டாலினின்  கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்.... சட்டமன்றத் தொகுதியில் பாஜக ஒரு சிறப்பான வாக்கு சதவீதத்தை மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. 

அண்ணா மலை யாத்திரை தாக்கத்திற்கு பின்..!

வடசென்னை பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்பாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியின் காவல்துறையின் பல தடைகளை மீறி "என் மண் என் மக்கள்" யாத்திரையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை"என் மண் என் மக்கள்" யாத்திரையின் வெற்றி பொதுக் கூட்டத்திற்கு வந்து கொளத்தூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.



 அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என கொளத்தூர் மக்களின் குறைகளை சுட்டிக்காட்டி பேசினார்.


அதைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏறத்தாழ 200 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி திட்டங்களை உடனடியாக தமிழக அரசு அறிவித்தது.


பாஜகவின் சார்பாக  அண்ணாமலை தலைமையில் நடத்தப்பட்ட 

"என் மக்கள் என் மக்கள்" ஆதரவு அளிக்கும் வகையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில்  தாமரை சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர்

வடசென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக