புதன், 5 ஜூன், 2024

சின்னம்மா சசிகலா ஆவேசம்இனியும் பொறுமையாக இருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் என பரபரப்பு

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

6-6-2024

இனியும் பொறுமையாக இருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் - சசிகலா ஆவேசம் பரபரப்பு 



இது பற்றிய செய்தியாவது:-


"சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாவது. ....!!!


"அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம் வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம் புதிய சகாப்தம் படைப்போம்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை.


 தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல் ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் இனி வரும் காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது.


தி.மு.க.,வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருத முடிகிறது.


 மேலும் "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்கமுடிகிறது.



பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதன் பின்னர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கஷ்டப்பட்டு இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன்.


அதிமுக கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன்.


 ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒருசில இடங்களில் நான்காவது இடத்திற்கும் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை.


இதற்காக இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ளவரை அயராது பாடுபட்டார்கள். இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கும். தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்கும். இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை.


யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்தில் கொள்ளவேண்டும். அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை.இதுபோன்று புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும்.


புரட்சித்தலைவி அம்மா அவர்கள் "இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும்" என்று குளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மூன்றாண்டு ஆட்சியில் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். தி.மு.க.,வினர் நாள்தோறும் தமிழக மக்களை கசக்கி பிழிந்து அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர். எனவே மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த தி.மு.க.,வினர் எதிர்கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.


இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநல போக்கோடு செயல்பட்டு இயக்கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால் கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. மேலும் இதன் காரணமாக தமிழக மக்களும் தி.மு.க.,வினரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். எனவே தி.மு.க.,வினரில் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை காத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கினார். இதனை மனதில் வைத்துதான் இந்த இயக்கத்தில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.


தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித்தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும். இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து தமிழக மக்களையும் இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள். உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து அம்மா அவர்கள் கட்டிக்காத்த அதே கொள்கைகளை நிலை நிறுத்தி ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ய புரட்சித்தலைவியின் வழி வந்த ஓர் தாய் வயிற்று பிள்ளைகளாக ஓர் அணியில் நின்று ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் என்னுடைய குறிக்கோள்.


கழகத்தினரும் தமிழக மக்களும்தான் எனது குடும்பம். புரட்சித்தலைவி அம்மா அவர்களை போலவே எனெக்கென்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது. எனக்கென்று தனியாக எந்தவித விருப்பு வெறுப்புகளும் இருந்தது கிடையாது. 

புரட்சி தலைவி ஜெயலலிதா !!!

எனது உடன்பிறவா சகோதரியாக தோழியாக அரசியலில் ஆசானாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர் மறைவிற்கு பிறகு நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கட்சியின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் மட்டும் நான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.


அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியால் எங்கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பால் கடந்த 2011-ஆம் ஆண்டு சிறை செல்ல வேண்டிய நெருக்கடியான நேரந்திலும் எனது ஒரே சிந்தனை எப்படியாவது அம்மாவின் ஆட்சியை காப்பாற்றி விடவேண்டும். அதேபோன்று கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான்.


பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிவிட்டுதான் சென்றேன். ஆனால் என்ன நடந்தது தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் வரமுடியவில்லை. கட்சியும் காப்பாற்றப்படவில்லை. புரட்சி தலைவர் அவர்களோடு பயணித்த காலங்களில் அவர் இந்த கட்சி ஏழைகளுக்கான கட்சி என்றும் அதனால் கட்சிதான் முக்கியம் தொண்டர்கள்தான் முக்கியம் என்பதை எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.


எனவே எனக்கு இந்த கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களும் தமிழக மக்களும்தான் முக்கியம் இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது

 தமிழ் மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்ட அனைவரும் வாருங்கள். 


ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது.


மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு. வரும் 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. 


அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நம் இருக்கிறோம்.


கட்சியின் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் ஜெயலலிதா இல்லம் அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன் பிறப்புகளே ஒன்றிணைவோம் வாருங்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும் தமிழக மக்களின் வாழ்வுக்காகவும் ஒன்றிணைவோம்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக