புதன், 5 ஜூன், 2024

திமுக வில் இனைந்த தூத்துக்குடி அதிமுக ex கவுன்சிலர்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

6-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 


தூத்துக்குடி அதிமுக முன்னாள் கவுன்சிலர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் 




இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி பழைய 34வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் அக்கட்சியிலிருந்து விலகி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முருகனை சால்வை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் கண்ணன், இசக்கிராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, வட்டச்செயலாளர்கள் பொன்பெருமாள், சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் முத்துராமலிங்கம், பாஸ்கா், பகுதி பொருளாளர் உலகநாதன், மற்றும் செல்வம், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக