கனிமொழி எம்.பி.thoothukudi news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனிமொழி எம்.பி.thoothukudi news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜூன், 2024

கனிமொழி எம்.பி மீண்டும் வெற்றி திமுக வினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 5-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி மீண்டும் வெற்றி தூத்துக்குடி மாவட்ட திமுக வினர் மகிழ்ச்சி கொண்டாடி வருகின்றனர் 



அதிமுக உள்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

     தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், 

நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


 இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. 

     கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,58,430 ஆகும். இதில் 4,72,056 ஆண் வாக்காளர்களும், 5,03,325 பெண் வாக்காளர்களும், 87 திருநங்கைகளும் என மொத்தம் 9,75,468 வாக்குகள் பதிவாகின. 



இதில் பதிவான மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வஉசி பொறியியல் கல்லூாியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன


     இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம்  தேதி காலை 8 மணிக்கு மின்னனு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் வேட்பாளா்கள் முகவா்கள் முன்னிலையில் எண்ணும் பணி தொடங்கியது.


 இதற்காக ஓவ்வொரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் போடப்பபட்டு இருந்தன.


 தூத்துக்குடி கோவில்பட்டி தொகுதிகளில் 21 சுற்றுகளும், ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 19 சுற்றுகளும் வாக்குள் எண்ணப்பட்டன.


 இதில் முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார். 

     இதில் கனிமொழி 540729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 


அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் 147991 வாக்குகள் பெற்றார். 


இதன் மூலம் 392738 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி எம்பி வெற்றி வாகைசூடினார்.


 கடந்த முறை 563143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. 



 பின்னர் வெற்றி வெற்ற கனிமொழி எம்்பிக்கு தேர்தல் அதிகாாியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார்.


 அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பொியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், உள்பட பலர் உடனிருந்தனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விபரம் வருமாறு ...


கனிமொழி கருணாநிதி (திமுக) 540729, 


சிவசாமி வேலுமணி (அதிமுக) 147991,


 விஜயசீலன் 

( த.மா.கா.) 122380,


 ரொவீனா ரூத் ஜோன் (நாம் தமிழர் கட்சி) 120300, 


ராஜா  (

நாம் இந்தியர் கட்சி) 6640,  


அருணாதேவி (சுயேட்சை) 6072,


 சித்திரை ஜெகன் எஸ் (சுயேட்சை) 3640, 


 சிவனேஸ்வரன் ஜே (சுயேட்சை) 2245, 


  சாமுவேல் (சுயேட்சை) 2240,


 மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ்) 2158, 


 சண்முகசுந்தரம் கே (சுயேட்சை) 1832,


 முருகபாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி) 1736,


 பொன்குமரன்  (சுயேட்சை) 894,


 ஜெயக்குமார்  (சுயேட்சை) 825,

 காந்திமல்லர்  (சுயேட்சை) 791,

 பிஷப் டாக்டர் கோட்ரே நோபல் 

(ஆ. ஜ.பா.க) 757,


 பெருமாள்குமார்  புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி 727,

 இசக்கிமுத்து  (சுயேட்சை) 699,

 கண்ணன்  (சுயேட்சை) 679,


 டேவிட் ஜெபசீலன் (சுயேட்சை) 656,

 சுடலைமுத்து (சுயேட்சை) 576,

 கிருஷ்ணன்  (சுயேட்சை) 479,


 ராதாகிருஷ்ணன்  (சுயேட்சை) 456,

 ஜேம்ஸ்  (சுயேட்சை) 433, 


பொன்ராஜ் (சுயேட்சை) 428,


 பிரசன்ன குமார் (சுயேட்சை) 396,

 செல்வமுத்துக்குமார்  (சுயேட்சை) 341,


 செந்தில் குமார் (சுயேட்சை) 290,

 நோட்டா 9682

 திமுக வேட்பாளர் கனிமொழி யை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.




வெள்ளி, 8 செப்டம்பர், 2023

தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு'' போட்டிகளை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி

thoothukudileaks 8-9-2023

photo news by arunan journalist 


தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு'' போட்டிகளை துவக்கி வைத்தார் கனிமொழி எம்பி 



தூத்துக்குடியில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி எதிராக அமைந்துள்ள தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, முத்துநகர் கடற்கரையில், கடல்சார் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் முத்துநகர் கடற்கரையில் இன்று (08/09/2023) தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய கயாக்கிங் சங்கத்தின் சார்பில் நடைபெறும் "தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ட்அப் போர்டு'' போட்டிகளை துவக்கி வைத்தார் தூத்துக்குடி கனிமொழி எம்பி 









இன்று காலை 10மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ... அமைச்சரும், கீதா ஜீவன்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர்ஜெகன் பெரியசாமி, சார் ஆட்சியர்.கௌரவ் குமார், மாநகராட்சி ஆணையர்தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!







புதன், 23 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடியில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் புதிதாக உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம் கனிமொழி எம்பி திறப்பு

 thoothukudileaks 23-8-2023

news by arunan 

தூத்துக்குடியில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் புதிதாக உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம் கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டி முடிக்கப்பட்டது 


தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி 

இன்று (23/08/2023) புதன்கிழமை,  தூத்துக்குடியில் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம் திறந்து வைத்தார்.உடன் அலுவலக பயன்பாட்டிற்கு வந்தது .

புதிய கட்டடம் முன்பு மரகன்று நடும் கனிமொழி எம்பி 

மரகன்று க்கு  பூவாளி.யில்.தண்ணீர் ஊற்றி விடும் அமைச்சர் கீதா ஜீவன் 



உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமானகீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் .எம்.சி.சண்முகையா, 

புதிய கட்டியிட அடிக்கல் திறப்பு 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் .ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி ரூ 2 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மரக்கன்று நட்டினார்.அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 thoothukudi leaks:-21-8-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர்


 தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி  ரூ 2 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மரக்கன்று நட்டினார். 

குட்டத்து மாடசாமி திருக்கோவில் குளம் கனிமொழி எம்பி ஆய்வு



அவருடன் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


இதுபற்றி செய்தியாவது:-

      தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட சிவ குளம் தூர்வாரப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


குறிப்பாக பண்டுகரை பகுதியில் இரண்டரை கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் தங்களது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக “நமக்கு நாமே திட்டம் 2022- 23 கீழ்” 2 கோடி மதிப்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிறைவு பெற்றது.

கனிமொழி எம்பி மரக்கன்று நடுகிறார்


அதையொட்டி நடைபாதையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்து குளத்தின் கரையோர பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வகையான 300 மரக்கன்றுகள் நட்டி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் கீதாஜீவன் மரக்கன்று நடுகிறார் 

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நடுகிறார் 


      நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் காந்திமதி, மும்தாஜ், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், தாசில்தார் பிரபாகர், 



பகுதி திமுக செயலாளர் சிவகுமார், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், திமுக வட்டச்செயலாளர்கள் ரவிந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

புதன், 12 ஜூலை, 2023

எம்.பி.கனிமொழியை சந்தித்த... தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி யினர் வாழ்த்து பெற்றனர்

தூத்துக்குடி லீக்ஸ் 13-7-2023

செய்தி புகைப்படங்கள்

த.சண்முக சுந்தரம்

தூத்துக்குடி திமுக வடக்கு -தெற்கு மாவட்ட இளைஞர் அணியினர் திமுக கட்சியின் துனை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி யை நேரில் சந்தித்து  வாழ்த்துபெற்றனர் . தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி உற்சாகம் .


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
(மாநில இளைஞர் அணி செயலாளர்)



இதுபற்றிய செய்தியாவது:-


திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

 தற்போது துடிப்புடன் செயல்படும் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம்

       தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பை.மு.ராமஜெயம், துணை அமைப்பாளர்களாக எம்.சி.அம்பாசங்கர், ஜெ.பாலமுருகன், மா.சுதாகர், ந.பால்துரை, ஏ.எம்.ஸ்டாலின், எம்.குமார் பாண்டியன், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து தூத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ள கனிமொழி எம்.பி. அலுவலகத்தில் திமுக கட்சியின் துனை பொதுசெயலாளர்  கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டம்



அப்போது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைத்துறை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெஸி பொன்ராணி, செல்வகுமார், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், நெல்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    . தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக சி.எம்.மதியழகன், துணை அமைப்பாளர்களாக பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளராக அருண்சுந்தர், துணை அமைப்பாளராக சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவீ, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டியில் வைத்து கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தூத்துக்குடி திமுக  வடக்கு மாவட்டம


 அப்போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர். 

 புதிய நிர்வாகிகளிடம் கனிமொழி எம்.பி. கூறுகையில்..

 தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.