புதன், 12 ஜூலை, 2023

எம்.பி.கனிமொழியை சந்தித்த... தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி யினர் வாழ்த்து பெற்றனர்

தூத்துக்குடி லீக்ஸ் 13-7-2023

செய்தி புகைப்படங்கள்

த.சண்முக சுந்தரம்

தூத்துக்குடி திமுக வடக்கு -தெற்கு மாவட்ட இளைஞர் அணியினர் திமுக கட்சியின் துனை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி யை நேரில் சந்தித்து  வாழ்த்துபெற்றனர் . தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி உற்சாகம் .


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
(மாநில இளைஞர் அணி செயலாளர்)



இதுபற்றிய செய்தியாவது:-


திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

 தற்போது துடிப்புடன் செயல்படும் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம்

       தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பை.மு.ராமஜெயம், துணை அமைப்பாளர்களாக எம்.சி.அம்பாசங்கர், ஜெ.பாலமுருகன், மா.சுதாகர், ந.பால்துரை, ஏ.எம்.ஸ்டாலின், எம்.குமார் பாண்டியன், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து தூத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ள கனிமொழி எம்.பி. அலுவலகத்தில் திமுக கட்சியின் துனை பொதுசெயலாளர்  கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டம்



அப்போது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைத்துறை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெஸி பொன்ராணி, செல்வகுமார், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், நெல்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    . தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக சி.எம்.மதியழகன், துணை அமைப்பாளர்களாக பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளராக அருண்சுந்தர், துணை அமைப்பாளராக சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவீ, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டியில் வைத்து கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தூத்துக்குடி திமுக  வடக்கு மாவட்டம


 அப்போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர். 

 புதிய நிர்வாகிகளிடம் கனிமொழி எம்.பி. கூறுகையில்..

 தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக