தூத்துக்குடி லீக்ஸ் 14-7-2023
செய்தி புகைப்படங்கள்
த.சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
கலைஞரால் ஜெயலலிதா பயனடைந்தார்
தமிழகத்தில் கலைஞரை வைத்து நான் பயனடையவில்லை என்று யாரும் சொல்ல முடியாது.
கலைஞரின் பேனா தமிழக வளர்ச்சிக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்பு இறையான்மையை காத்துள்ளது. தூத்துக்குடியில் ஆ.இராசா பரபரப்பு பேச்சு
இது பற்றிய செய்தியாவது:-
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகில் (13-7-2023)நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.இராசா பேசியதாவது:-
கலைஞரின் நூற்றாண்டு விழா திமுகவின் சார்பிலும் அரசின் சார்பிலும் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்ல காரல்மார்க்ஸ், பெரியார், தோற்றம், மறைவு, கலைஞரின் நூற்றாண்டு விழாவை பற்றி பேசுவதற்கு முன் அவருடைய தத்துவம் தலைவன், நிர்வாகம், என பலவற்றையும் பற்றி பேச வேண்டும்,
திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வியில்லாத ஊரில் ஜாதிய கட்டமைப்பும் பெரிய அளவில் இல்லாமல் இருந்து இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய அளவில் இருந்து பணியாற்றினார்.
அவர் தேசிய கட்சி தலைவரும் அல்ல கட்சி தலைவராக 50 ஆண்டு எம்.எல்.ஏவாக 60 ஆண்டு 5 முறை தமிழக முதலமைச்சர் என்று அவருடைய வரலாறு தொடர்ந்தன.
தமிழகத்தில் கலைஞரை வைத்து நான் பயனடையவில்லை...என்று யாரும் சொல்ல முடியாது. சிலர் பொய் கூறுவார்கள் ஆனால் தமிழ்த்தாய் பாடல் பாடும் போது எழுந்து நின்று வணக்கம் கூறுகிறோம் அல்லவா அதை கொண்டு வந்தவர் கலைஞர்.
கலைஞரால் ஜெயலலிதா பயனடைந்தார் அவரும் ஓரு நேரத்தில் பேசியதுண்டு. அவருக்கும் இது பொருந்தும். இந்தியாவின் அரசியலுக்கு ஆபத்து வந்த போது எல்லாம் அதற்கு துணை நின்றவர் கலைஞர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை 13 நீதிபதிகள் 170 நாட்களாக அலசி ஆராய்ந்து நடைமுறைப்படுத்திய சட்டத்தை இன்று ஒன்றிய அரசின் பிரதமர் மோடி அதில் மாற்றங்கள் என்ற பெயரில் இந்தியாவிற்கு தேவையில்லாதவற்றை செய்துவருகிறார்.
தனித்தமிழ்நாடு வேண்டும் என்று அண்ணா கடுமையாக போராடிய காலத்தில் ..திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காமராஜருக்கு பெரியார்
ஆதரவு தெரிவித்தார்.
அப்போதைய காலக்கட்டத்தில் பாகிஸ்தான் பிரச்சனை நடைபெற்ற காலம். அப்போது சீனா இந்தியாவின் மீது படையெடுத்த காலத்தில் அண்ணா அந்த கொள்கையை கைவிட்டார். ஏனென்றால் வீடு இருந்தால் தானே அதற்கு ஓடு மாற்ற முடியும் நாடு இருந்தால் தானே தனித்தமிழ்நாடு கேட்க முடியும் என்று முடிவு எடுத்தார்.
இந்தியாவின் இறையான்மை ஒற்றுமை கலாச்சாரம் ஜனநாயகம் அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசிற்கு பல ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய காலக்கட்டத்திற்கு முன்பு இந்திராகாந்தி எமர்ஜென்சி காலத்தில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கலைஞரிடம் ஆதரவு கேட்டார்.
அப்போதே எனக்கு ஆட்சி பெரிதல்ல. கொள்கைதான் முக்கியம் என்று முடிவு எடுத்தார் கலைஞர். சிம்மாசனத்தை விட சிறைச்சாலையே எனக்கு முக்கியம் என்றார்.
இதே இடத்தில் எடப்பாடி இருந்தால் இந்த தூத்துக்குடியிலிருந்து ரயில் இஞ்ஜின் பின்பே சென்றிருப்பார்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரத்தில் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று கூறியபோது நிதியமைச்சராக இருந்து மொராஜ்ஜி தேசாய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பல தொழிலதிபர்களுக்கு மட்டும் கடனுதவி வழங்கியதை சாதாரன மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 25 எம்.பிக்கள் மூலம் ஆதரவு கொடுத்து அதை நிறைவேற்றி கலைஞர் காட்டியதால் வங்கிகள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டன. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது திமுக கூட்டணியில் இருந்தனர். அப்போது திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் முஸ்ஸீம் அமைப்புகள் எங்களை கிண்டல் கேளிகள் செய்தனர்.
அப்போது முரசொலி மாறன் மூலம் பிஜேபி கொள்கை வேறு எங்களது கொள்கை வேறு என்பதை எடுத்துக்கூறி சில ஒப்பந்தங்களை வலியுறுத்தி இந்தியாவை காப்பாற்றும் வகையில் இணைந்து செயல்பட்டோம். அதில் உள்ள ஒப்பந்தம் காஷ்மீரில் 370 பிரிவை நீக்கக்கூடாது அயோத்தி சம்பவத்தில் தேவையற்றவைகளை செயல்படுத்தக்கூடாது. என பல ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து பணியாற்றினார். ராமர் எங்களுக்கு எதிரி அல்ல. இந்தியாவின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் உத்திரபிரதேசத்தில் 35 சதவீதம், குஜராத்தில் 24 சதவீதம், தமிழ்நாட்டில் 11 சதவீதம், கேரளா 10 சதவீதம, என்ற கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திராவிட மாடல் தான் வென்றுள்ளது.
குஜராத் மாடல் அல்ல. காஷ்மீரில் 370 பிரிவை எடுத்துவிட்டீர்கள் பல வளர்ச்சி வரும் என்று சொல்லப்பட்டது ஆனால் ஒன்றும் வரவில்லை. கலைஞரின் ஆட்சியில் தான் கவுண்டர் சமுதாயம் சார்ந்த மக்கள் எல்லாவற்றிலும் நாங்கள் வளர்ச்சியடையவில்லை
ஆகையால் அதிகாரம் கல்வி போன்ற பல வளர்ச்சிகளுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கலைஞரின் பேனா, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகியுள்ளார்.
பிஜேபி அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியுள்ளார். பிஜேபி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வக்கீலாகியுள்ளார். இதையெல்லாம் மறந்துவிட்டு பேனாவின் மதிப்பு தெரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்ன நியாயம்?
1929ல் பெரியார் கொண்டு வந்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வேண்டும் என்று கொண்டுவந்ததை 1989ல் கலைஞர் நிறைவேற்றி காட்டினார். அதிலிருந்து 30 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப்படி பல்வேறு வகையில் கலைஞரின் பேனா தமிழக வளர்ச்சிக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்பு இறையான்மையை காத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது பல்வேறு பிரச்சனைகளைப்பற்றி பேசுவதற்காக 18 நாள் தொடர்ந்து இந்த நாட்டுக்காக திமுக காங்கிரஸை சேர்ந்த 39 எம்.பிக்கள் போராடினோம்.
திமுகவை பார்த்து மோடிக்கு பயம் வந்துவிட்டது. சனாதனம் எதிர்ப்பை காட்டி வருகிறோம். இந்தியாவை காப்பாற்ற சிறைசென்ற குடும்பம் நேரு குடும்பம் ஆனால் இன்று அதானிக்காக எல்ஐசியில் மக்களின் முதலீட்டை வழங்குவது எனப்பல வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.
இதில் உள்ள முதலீடுகளை மோடியுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு அரசு விமானத்தில் சென்று அங்கே முதலீடு செய்கிறார். இதை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆதாரத்துடன் இதை வெளியிட்டுள்ளது.
இதில் உள்ள முறைகேடுகளுக்கு மோடிதான் காரணம் அவர் துணை செல்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்டதற்கு இன்று வரை பதிலில்லை.
அந்த நிறுவனமும் உங்களுக்கு துணிவிருந்தால் எங்கள் மீது வழக்கு தொடருங்கள் என்று கூறினார்கள் அதுவும் இல்லை. அதே போல் என் மீதும் 1லட்சத்து 76ஆயிரம் கோடி ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நானே ஆஜராகி அந்த வழக்கிலிருந்து விடுப்பட்டுள்ளேன். ஒன்றிய அரசு அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்காமல் சுயநலத்தோடு செயல்படுகிறது. இதைத்தான் கலைஞரின் வழியில் தளபதியார் சுட்டிக்காட்டி தைரியமாக கேள்விகளை எழுப்பி வருகிறார்.
மணிப்பூரில் நடைபெறும் சம்பவத்தால் முதலமைச்சர் கவர்னர் வீட்டைவிட்டே வெளியே வரமுடியவில்லை மத்திய அமைச்சர் வீடு அடித்து நொருக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரிடமிருந்து 200 துப்பாக்கிகள் பறித்துவிட்டு சென்றுள்ளனர்.
இப்படி கலவரப்பூமியாக இருக்கும் மணிப்பூரைப்பற்றி பேசாமல் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதைப்பற்றி கவர்னர் பேசி வருகிறார். அவரது புத்தி கெட்டுவிட்டது.
மோடியின் செயல்பாடுகளுக்கு முதல்வரின் எதிர்ப்புகள் தொடரும். நாட்டின் நலன் முக்கியம் என்று கலைஞரின் வழியில் தளபதியார் பயணிக்கிறார். அவர்வழியில் நாம் அனைவரும் பயணிப்போம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவோம் என்று பேசினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர் இருதயராஜ், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் இரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, ஜான் அலெக்ஸாண்டர், கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்;ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளா ரமேஷ், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், தொண்டரணி அமைப்பாளர் சங்கர், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், பிக்அப் தனபால், ஆர்தர்மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத், பாக்கியதுரை, மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், சக்திவேல், நாராயணன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, சரவணக்குமார், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், பவாணி, ஜான்சிராணி, மகேஸ்வரி, மரியகீதா, கந்தசாமி, பொன்னப்பன், விஜயலட்சுமி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், வைதேகி, விஜயகுமார், ராஜதுரை, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, டென்சிங், முக்கையா, ரவீந்திரன், கருப்பசாமி, பாலகுருசாமி, கதிரேசன், கீதாசெல்வமாரியப்பன், பொன்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மற்றும் கருணா, மணி, அல்பட், பிரபாகர், ஜோஸ்பர், மகேஸ்வரசிங், உலகநாதன், சக்திவேல், விக்னேஷ், மகளிர் அணி ரேவதி, சத்யா, பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக