புதன், 12 ஜூலை, 2023

புதன் கிழமை தோறும் தூத்துக்குடி மாவட்ட எஸ் பி. பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் பொதுமக்கள் தூத்துக்குடி எஸ்பி இடம் நேரில் பேசி மனு அளிக்கலாம்

 தூத்துக்குடி லீக்ஸ் :12.07.2023


புதன் கிழமை தோறும் தூத்துக்குடி மாவட்ட எஸ் பி. பாலாஜி சரவணன்  தலைமையில் ...பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இவ்வாரம் பொதுமக்கள் அதிகமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மாவட்ட எஸ் பி பாலாஜி சரவணன்  அவரிடம் நேரில் பேசி மனு கொடுத்திட வந்திருந்தார் கள்.  

 


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுகிறது . 


 இன்று (12-7-2023) புதன் கிழமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.


அதன்படி புதன் கிழமையான இன்று (12.07.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 13 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 42 மனுதாரர்கள் என மொத்தம் 55 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். 

வீடியோ பார்க்க

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக